அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து! - ஐசிசி

104 உறுப்பு நாடுகளுக்கும் தற்போது சர்வதேச டி20 அந்தஸ்து

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகள் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் தற்போது சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

இதையடுத்து ஆப்ரிக்கா (22), அமெரிக்கா (17), ஆசியா (21), கிழக்கு ஆசிய- பசிபிக் (11), ஐரோப்பா (34) ஆகிய 104 உறுப்பினர்களும் சர்வதேச டி20 அந்தஸ்து பெற்றுள்ளனர். இதுவரை 18 நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஜூலை 1 2018ம் தேதி உலகின் அனைத்து மகளிர் அணிக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்படும். அதேபோல் அனைத்து ஆண்கள் அணிக்கும், 2019 ஜனவரி 1ம் தேதி சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டை அனைத்து நாடுகளுக்கும் பரவச் செய்து, அதன் ரீச்சை அதிகப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close