/indian-express-tamil/media/media_files/SHevuxsacmwUKgjyR62E.jpg)
சி.எஸ்.கே அணி தரப்பில் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு தோனி கையெழுத்திட்ட ஜெர்சியும், அவரது கையெழுத்துடன் கூடிய பந்துகளும் பரிசாக அளிக்கப்பட்டன.
IPL 2024 | MS Dhoni | Chennai Super Kings | Ambati Rayudu: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியைக் காண வழக்கம் போல் ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டனர். சென்னை அணி இந்த சீசனில் சொந்த மைதானத்தில் ஆடும் கடைசி லீக் போட்டி என்பதாலும், ஜாம்பவான் வீரரான தோனியின் கடைசி போட்டியாக இருக்கக் கூடும் என்பதாலும் ரசிகர்கள் பலரும் உணர்ச்சி வசப்பட்டனர்.
இந்தப் போட்டிக்குப் பிறகு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னை அணி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்தனர். அப்போது அணி தரப்பில் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு தோனியின் கையெழுத்திட்ட ஜெர்சியும், தோனியின் கையெழுத்துடன் கூடிய பந்துகளும் பரிசாக அளிக்கப்பட்டன. இதேபோல், சூப்பர் ஃபேன்ஸ்-க்கு நன்றி என்று மைதானத்தின் உள்ளே செல்லும் போது அளிக்கப்பட்ட கார்டுகள் அனைவரையும் நெகிழ்ச்செய்தது.
THA7️⃣A F♾️REVER!🔥#YellorukkumThankspic.twitter.com/J6sFP6m6pZ
— Chennai Super Kings (@ChennaiIPL) May 13, 2024
அத்துடன், ரசிகர்கள் அனைவரும் தோனியை அருகில் பார்க்கும் வகையில், அவர் பவுண்டரிக்கு அருகில் நடந்து சென்று நன்றி சொன்னது அங்கு இருந்தவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது. இதனால், போட்டி முடிவடைந்து 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிய போதும், மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் கூட்டம் அப்படியே இருந்தனர். இது ஒளிபரப்பாளர்கள், வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இதனை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசுகையில், "சென்னையில் தோனி கடவுளாக பார்க்கப்படுகிறார். இனி வரும் ஆண்டுகளில், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
எம்.எஸ் தோனி உலகக் கோப்பை, ஐ.பி.எல் மற்றும் சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளார், இது சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அணி, தேசம் மற்றும் சி.எஸ்,கே-வுக்காக அவர் எப்போதும் மேலே சென்று இருக்கிறார். அவர் தனது வீரர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அந்த அரிய நபர்.
கூட்டத்தில் உள்ள அனைவரும் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். அவர் ஒரு வித்தியாசமானவர். சென்னையில் இதுவே அவரது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்." என்று அவர் கூறினார்.
முன்னதாக, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் குஷ்பு போன்ற பிரபலங்களுக்கு கோயில்களைக் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Aaruchaamy serving some 'out of the park' Yellove! 💛🎾#YellorukkumThanks@IamShivamDubepic.twitter.com/32T6eYZ5yw
— Chennai Super Kings (@ChennaiIPL) May 13, 2024
Superfans - Our Lifeline! 🥳🔥#YellorukkumThankspic.twitter.com/IS2Yl3ZXhA
— Chennai Super Kings (@ChennaiIPL) May 13, 2024
3️⃣➕7️⃣ = The Bandham of a lifetime! 🦁💛#YellorukkumThanks@msdhoni@ImRainapic.twitter.com/LXYinxP5QS
— Chennai Super Kings (@ChennaiIPL) May 13, 2024
Andrum Indrum Endrendrum 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) May 13, 2024
The shining legacy continues 🏅#WhistlePodu#Yellove 🦁💛@msdhonipic.twitter.com/Y38J0cMPxI
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.