worldcup 2023 | india-vs-pakistan | rajini-kanth | amitabh-bachchan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டெல்லியில் நடந்த 9வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது. அடுத்ததாக இந்திய அணி வருகிற சனிக்கிழமை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அகமதாபாத்தில் வைத்து எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நேரில் காண சூப்பர் ஸ்டார் நடிகர்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் வருகை தர உள்ளார்கள். இதனை ஒட்டி போட்டி நடக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட உள்ளது.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் நவராத்திரி விழாவின் தொடக்க நாள் என்பதால், போட்டி ஒருநாள் முன்னதாக 14ம் தேதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. இதனால், அகமதாபாத்தில் ஹோட்டல் ரூம் புக் செய்த ரசிகர்கள் அடுத்த நாளுக்கு மற்றும் சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில், பல ஹோட்டல்கள் தங்களுடைய டீலக்ஸ் அறைகளை ஒரு இரவுக்கு ரூ. 20,000க்கு விற்றுக்கொண்டிருந்தன. தற்போது புதிய முன்பதிவுகளை ஈர்க்கும் முயற்சியில் விலைகளை சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை குறைத்துள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/PUTxL7bM14YeB0owDOrD.jpg)
டிக்கெட் குளறுபடி அவர்களின் வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சனிக்கிழமை போட்டி தொடங்குவதற்குள் நிலைமை சீராகும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பயண ஏஜெண்டுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் பொதுப் போக்குவரத்து வசதியை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், நகரில் மெட்ரோ ரயில் சேவைகளும் நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியை நேரில் காண சுமார் 1 லட்சத்துக்கு மேலான ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால், அவர்கள் சுமூகமாக நடக்கவும், சரியான நேரத்தில் தங்களது இருக்கையில் அமரவும், காலை 10 மணிக்கெல்லாம் நுழைவாயில்களை திறக்க குஜராத் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்து, ரசிகர்கள் தங்கள் பணப்பைகள், மொபைல் போன்கள், தொப்பிகள் மற்றும் போட்டிக்குத் தேவையான மருந்துகளை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வேறு எதையும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) போட்டி தொடங்க 45 நிமிடத்துக்கு முன்பாக கலைநிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது, இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். குறிப்பாக இந்தியா சூப்பர்ஸ்டார் நடிர்களான அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதனால், மைதானத்தில் பல அடுக்கு பாதுகாப்புக்கு இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“