‘தோனி கற்றுக் கொடுத்த 3 வாழ்க்கைப் பாடங்கள்’ – ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

தோனியின் ஹேர் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு, டிவியில் என் அம்மா அவரை சுட்டிக்காட்டியபோது தான் நான் அவரை கவனித்தேன்

By: August 19, 2020, 9:46:15 AM

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) ட்விட்டரில் மிக ஆக்டிவாக இருக்கும் பிஸ்னஸ் ஆளுமை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அவர் தோனி குறித்த தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற தோனி, தற்போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் கேல் ரத்னாவுக்கு பரிந்துரை

தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில், “அனைத்து சூழ்நிலைகளிலும் நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றிகள். இன்று மாலை 1929 (07.29) மணி முதல் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கருதி கொள்ளுங்கள்” என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

தோனி ஓய்வு பெற்ற சில மணி நேரத்தில், சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவிக்க, ‘நண்பேன்டா’ என்று ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இன்னும், கொண்டாட்டம் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில், “தோனி விளையாட்டிற்கு என்ன கொண்டு வந்தார் என்பது பற்றி நிறைய பேசிவிட்டோம். நான் கிரிக்கெட்டில் நிபுணர் இல்லை, தோனியின் ஹேர் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு, டிவியில் என் அம்மா அவரை சுட்டிக்காட்டியபோது தான் நான் அவரை கவனித்தேன்.

‘ஏய் கோலி! சொன்னதை மட்டும் செய்’ – களத்தில் தோனியின் ஆக்ரோஷ பன்ச் வீடியோஸ்

மகேந்திர சிங் தோனி நமக்கு 3 வாழ்க்கைப் பாடங்களை கற்பித்திருக்கிறார். அவை,

உண்மையாக இருங்கள்.
தைரியமாக இருங்கள் / ரிஸ்க் எடுக்கத் தயங்காதீர்கள்.
முன்னே நில்லுங்கள்.

என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ரெய்னா குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Anand mahindra shares three things people can learn from ms dhoni cricket news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X