அபார பந்தில் மிரள வைத்த 19 வயது ஆப்கன் பவுலர் – தடுமாறி விழுந்த ஆந்த்ரே ரசல் (வீடியோ)

ஆந்த்ரே ரசலின் காட்டடி ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த 2019 ஐபிஎல்-ல் ஒவ்வொரு எதிரணிக்கும் எதிராக அவர் ஆடிய ‘திருவிளையாடல்’ அனைத்தும் உச்சபட்ச மாஸ் ரகம். இவர் களத்தில் நிற்கும் வரை எதிரணியின் கேப்டன், தனது நகங்கள் ஒவ்வொன்றாக இழந்ததை நாம் பார்க்க முடிந்தது. அம்பயர்களோ, தங்கள்…

By: November 21, 2019, 3:20:19 PM

ஆந்த்ரே ரசலின் காட்டடி ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த 2019 ஐபிஎல்-ல் ஒவ்வொரு எதிரணிக்கும் எதிராக அவர் ஆடிய ‘திருவிளையாடல்’ அனைத்தும் உச்சபட்ச மாஸ் ரகம்.

இவர் களத்தில் நிற்கும் வரை எதிரணியின் கேப்டன், தனது நகங்கள் ஒவ்வொன்றாக இழந்ததை நாம் பார்க்க முடிந்தது. அம்பயர்களோ, தங்கள் கைகளுக்கு தொடர்ந்து வேலை கொடுத்ததால், கடுப்பானதாகவும் தகவல் உண்டு.

20 பந்துகளுக்கு 70 ரன்கள் டார்கெட் என்றாலும், அதை 15 பந்துகளுக்குள் நிறைவேற்றி, நான்கைந்து பந்துகள் மீதம் வைத்து, பவுலர்களுக்கு மரியாதை செலுத்தியதை அவ்வளவு சீக்கிரத்தி மறந்துவிட முடியுமா?

ஆனால், இந்த ஜித்துக்கே ஜித்து காட்டியிருக்கிறார் ஆப்கன் பவுலர் ஒருவர். அபுதாபியில் நடந்து வரும் டி10 தொடரில், பங்களா டைகர்ஸ் மற்றும் நார்தன் வாரியர்ஸ் அணிகள் நேற்று (நவ.20) மோதின.

இதில், முதலில் பேட்டிங் செய்த டைகர்ஸ், 10 ஓவர்களில் 102 ரன்கள் குவிக்க, வெற்றியை நோக்கி களமிறங்கியது வாரியர்ஸ் அணி. இதில், ஆந்த்ரே ரசல் விளையாடியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, 31 வயதான ரசலுக்கு 19 வயதான இளம் ஆப்கன் ஸ்பின்னர் கைஸ் அஹ்மது ஒரு அபாரமான பவுன்ஸ் வீச, அதை சற்றும் எதிர்பாராத ரசல், தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.


அந்த பந்தை சந்தித்த போது, அவர் ஹெல்மெட் அணியவில்லை. ஐபிஎல்-லில் பவுலர்களை பொளந்தது போல், ஸ்பின்னர் அஹமதுவை சாத்த ஹெல்மெட் இல்லாமல் ஆடினார். ஆனால், அஹ்மது தலைக்கு குறி வைத்தது போல வீச, அரண்டு போன ரசல், உடனே டக் அவுட்டில் உயர்ந்து ஹெல்மெட் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்து தான் விளையாடினார்.

ஆனால், அஹ்மதுவின் 7 பந்துகளை சந்தித்த ரசலால் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது.

ஐபிஎல் பவுலர்ஸ் நோட் திஸ் பாயிண்ட்!!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Andre russell afghan spinner qais ahmads bouncer t10 league

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X