சி.எஸ்.கே-வின் அடுத்த 'சூப்பர் ஸ்டார்' இவர்தான்: இளம் வீரரை கை காட்டும் ஜாம்பவான் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சவாலான ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அணியை மீண்டும் கட்டியெழுப்ப டிவால்ட் ப்ரீவிஸ் ஒரு நீண்டகால துருப்புச் சீட்டாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சவாலான ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அணியை மீண்டும் கட்டியெழுப்ப டிவால்ட் ப்ரீவிஸ் ஒரு நீண்டகால துருப்புச் சீட்டாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Dewald Brevis

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் கடினமான சீசனை எதிர்கொண்டு வந்தாலும், அந்த அணியின் இளம் வீரர் டுவால்ட் ப்ரீவிஸ் மூலம் ஒரு ஒரு நம்பிக்கை தென்படுவதாக முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Anil Kumble: Dewald Brevis could be CSK’s next big star

ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில், தென்னாப்பிரிக்காவின் இளம் வீரரான ப்ரீவிஸை வெகுவாகப் பாராட்டி பேசிய, கும்ளே, இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்த ஒரு சில சாதகமான விஷயங்களில் ப்ரீவிஸின் ஆட்டம் குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.

மேலும், சுழற்பந்து வீச்சை அவர் எதிர்கொள்ளும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. சென்னை ஆடுகளம் அவ்வளவு எளிதானது அல்ல. சில பந்துகள் மெதுவாக வரும். ஆனால் ப்ரீவிஸ் இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் முதல் தர கிரிக்கெட்டிலும், 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். அதன் மூலமாகத்தான் அவர் ஐபிஎல்லுக்குள் நுழைந்தார்.

Advertisment
Advertisements

ப்ரீவிஸின் வருகையே ஒரு சுவாரஸ்யமான கதை. காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய வீரருக்கு பதிலாக நடு சீசனில் அவர் சென்னை அணியில், சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் வந்தவுடனேயே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். இந்த செயல், ஒரு காலத்தில் இதேபோல் அணியில் இணைந்து பின்னாளில் ஜாம்பவானாக திகழ்ந்த கிறிஸ் கெய்லின் வருகையை நினைவுபடுத்துகிறது.

ப்ரீவிஸ் ஒரு மாற்று வீரராக வந்தவர், ஆரம்பத்தில் அணியில் கூட இல்லை. 2011ல் ஆர்சிபி அணிக்கு கிறிஸ் கெய்ல் மாற்றாக வந்து எப்படி ஒரு ஐகானாக மாறினாரோ, அதுபோல ப்ரீவிஸும் வருவார் என்று நம்புகிறேன். ப்ரீவிஸின் பல்வேறு வகையான ஷாட்கள், அழுத்தமான சூழ்நிலையிலும் நிதானமாக ஆடுவது மற்றும் சென்னை போன்ற கடினமான ஆடுகளத்தில் அவரது முதிர்ச்சியான ஆட்டம் ஆகியவை சிஎஸ்கே அணி அவரைச் சுற்றி ஒரு அணியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்று கும்ப்ளே வலியுறுத்தினார்.

ப்ரீவிஸிடம் அனைத்து விதமான ஷாட்களும் உள்ளன. ரச்சின் ரவீந்திரா, மத்ரே மற்றும் பதிரனா ஆகியோருடன் சிஎஸ்கே ஒரு இளம் அணியைக் கொண்டுள்ளது. ப்ரீவிஸ் இந்த அணியின் நீண்ட கால சொத்தாக இருக்க முடியும் என்று கூறிய கும்ளே, இந்த சீசனில் சென்னை அணியின் தேர்வுகள் குறித்து கூறுகையில், தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் அதிக நிலைத்தன்மை இருந்திருக்கலாம் என்று கூறினார்.

இருப்பினும், பிளேஆஃப் வாய்ப்புகள் குறைந்து வருவதால், எஞ்சிய போட்டிகளை எதிர்காலத்திற்கான வியூகமாக சிஎஸ்கே பார்க்க வேண்டும். இன்னும் ஐந்து போட்டிகள் உள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு போதுமான வாய்ப்பளித்து எதிர்காலத்திற்கான அணியை கட்டியெழுப்ப இது சரியான நேரம். முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடுவும் இதே கருத்தை தெரிவித்தார். இந்த சீசனின் பின்னடைவுகள் அணிக்கு ஒரு கடுமையான அதே சமயம், தேவையான பாடம் என்று கும்ளே கூறியுள்ளார்.

இது மிகவும் மோசமான நிலை என்று எனக்குத் தெரியும், ஆனால் சிஎஸ்கேவுக்கு இது ஒரு பெரிய பாடம். எம்.எஸ். தோனியே கூட காலத்திற்கு ஏற்ப விளையாட வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இனிமேல், அவர்கள் விளையாட்டின் மாற்றங்களுக்கு ஏற்ப மிகவும் கவனமாக இருப்பார்கள். ப்ரீவிஸ் மற்றும் மத்ரே ஆகியோரின் வருகை பெரிய சாதகமான விஷயங்கள் என்று குறிப்பிட்ட ராயுடு இதுபோன்ற மாற்றங்களுக்கு சில நேரங்களில் இதுபோன்ற கடினமான சீசன்கள் தேவைப்படுகின்றன.

சில சமயங்களில், ஒரு அணி தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும், விளையாட்டு நம்மை விட பெரியது என்பதை நினைவூட்டவும் இதுபோன்ற ஒரு சீசன் தேவைப்படுகிறது. நீங்கள் அடிப்படைகளை கடைபிடிக்க வேண்டும் மற்றும் பணிவாக இருக்க வேண்டும்," என்று கூறியுள்ளார். சிஎஸ்கே அணி ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி நகரும்போது, ப்ரீவிஸின் வருகை ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு கதையாக இருக்கலாம்.

Ipl Cricket Sports

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: