Anil Kumble on Ravichandran Ashwin Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்தியா தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது.
Advertisment
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அனில் கும்ப்ளே, சுழற் பந்துவீச்சு மன்னன் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழல் ஜாலம் பற்றிய அபார முயற்சியைப் பாராட்டி புகழ்ந்துள்ளார்.
"அஸ்வின் பேட்ஸ்மேன்களின் மனதுடன் விளையாடுகிறார். இது உங்களிடம் உள்ள திறன்களைப் பற்றியது மட்டுமல்ல. அஸ்வினை எதிர்கொண்ட ஒவ்வொரு பேட்ஸ்மேனும் நீங்கள் பார்க்கக்கூடிய அழுத்தத்தை அவர் மீது மாற்றும் திறன் இதுவாகும். அதை அவர்களின் உடல் மொழியில் நீங்கள் காணலாம்.
இடது கை பேட்ஸ்மேனுக்கு அவர் கிரீஸ்க்கு வெளியே வைட் ஆஃப் போல் வீசினார். இடது கை பேட்ஸ்மேன் பந்து வரும் என்று நினைத்தார், அப்போது தான் அஸ்வின் அந்த அழகான பந்து வீச்சை சந்தர்பாலுக்கு வீசினார், அது உள்ளே நுழைந்து அவரை விட்டு வெளியேறி ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது." என்று அவர் கூறினார்.
அஸ்வின் முதலாவது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார் என்பது குறிப்பித்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil