World Aquatics Championships in Budapest Tamil News: பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு நீச்சல் போட்ட அமெரிக்க நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸ் (வயது 25) போட்டியின் பாதியில் நீச்சல் குளத்தில் மயங்கினார். போட்டி தொடங்கிய போது வேகமாக நீந்தி சென்ற அவர் குளத்தின் நடுப்பகுதியில் மயங்கிவிடுகிறார். அப்போது அவர் தனது சுயநினைவையும் இழந்து விடுகிறார்.
அந்த சமயத்தில் அவரின் போட்டியை கவனித்துக் கொண்டிருந்த பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயெண்டஸ் மிகத் துரிதமாக செயல்பட்டு அனிதாவை காப்பாற்றுகிறார். அனிதாவை பயிற்சியாளர் ஆண்ட்ரியா நீச்சல் குளத்தில் இருந்து காப்பாற்றிய போது அவர் மூச்சு விடவில்லை. பின்னர் அனிதா அங்கிருந்த மருத்துவ மையத்திற்கு ஸ்ட்ரெச்சரின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டார். இப்படி ஒரு அமெரிக்க நீச்சல் வீராங்கனை நீச்சல் போட்டியின் போது மயங்கியது அங்கிருந்த அணியினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது.
மேலும், இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனிதா அல்வாரெஸ் நன்றாக இருப்பதாக அமெரிக்க நீச்சல் குழு அறிக்கையை வெளியிட்டனர்.
இது தொடர்பாக பேசியிருந்த பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயெண்டஸ், "அது ஒரு பெரிய பயமாக இருந்தது. உயிர்காப்பாளர்கள் அதைச் செய்யாததால் நான் குதிக்க வேண்டியிருந்தது. அனிதாவின் நுரையீரலில் தண்ணீர் மட்டுமே இருந்தது. அவர் மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தவுடன் எல்லாம் சரியாகிவிட்டது.
அந்த தருணத்தை நான் ஒரு மணிநேரம் போல் உணர்ந்தேன். விஷயங்கள் சரியாக இல்லை என்று நான் சொன்னேன், நான் லைஃப்கார்டுகளை தண்ணீரில் இறங்கும்படி கத்தினேன், ஆனால் நான் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அனிதா மயங்கிய போது மூச்சு விடவில்லை. ஒலிம்பிக் இறுதிப் போட்டியைப் போல என்னால் முடிந்தவரை விரைவாகச் சென்றேன்.
இப்போது அனிதா நன்றாக இருக்கிறார். டாக்டர்களும் அவர் நலமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நாளை அவர் நாள் முழுவதும் ஓய்வெடுப்பார். மேலும் அவர் இறுதிப் போட்டியில் நீந்த முடியுமா இல்லையா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்" என்று கூறியிருந்தார்.
நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸ் குளத்தில் இப்படி மயக்கமடைவது இது முதல் முறையல்ல. முன்னதாக, பார்சிலோனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின் போதும் அனிதா குளத்தில் மயங்கி விழுந்தார். அப்போதும் அவரை பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயெண்டஸ் தான் காப்பாற்றி இருக்கிறார்.
Rapid rescue.@AFP photographers Oli Scarff and Peter Kohalmi capture the dramatic rescue of USA's Anita Alvarez from the bottom of the pool when she fainted during the women's solo free artistic swimming finals at the Budapest 2022 World Aquatics Championships pic.twitter.com/8Y0wo6lSUn
— AFP News Agency (@AFP) June 23, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.