அட்லெடிகோ மாட்ரிட் தான் என் வீடு! - ஆன்டோய்னி க்ரீஸ்மன்

அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக தான் விளையாடுவேன் என ஆன்டோய்னி க்ரீஸ்மன் உறுதி

அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக தான் விளையாடுவேன் என ஆன்டோய்னி க்ரீஸ்மன் உறுதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அட்லெடிகோ மாட்ரிட் தான் என் வீடு! - ஆன்டோய்னி க்ரீஸ்மன்

Antoine Griezmann rejects move to Barcelona

லா லிகா கால்பந்து தொடரில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக தான் விளையாடுவேன் என்று ஆன்டோய்னி க்ரீஸ்மன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment

பிரான்ஸ் நாட்டின் முன்னணி நட்சத்திர கால்பந்து வீரராக வலம் வருபவர் ஆன்டோய்னி க்ரீஸ்மன். 27 வயதாகும் இவர் 2009 முதல் 2014 வரை சுமார் ஐந்து வருடங்கள் ஸ்பேனிஷ் கால்பந்து கிளப் அணியான ரியல் சோசியடட் அணிக்காக விளையாடினார். 2014-ல் சீசனுக்குப் பிறகு லா லிகா கால்பந்து கிளப் அணியான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு மாறினார். கடந்த நான்கு வருடங்களாக அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 142 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக, ஆன்டோய்னி க்ரீஸ்மன் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளில் ஏதேனும் ஒன்றிற்கு ஒப்பந்தம் ஆகப் போவதாக செய்திகள் வெளியானது. இதை க்ரீஸ்மன் திட்டவட்டமாக மறுத்து வந்தாலும் வதந்திகள் குறைந்தபாடில்லை. குறிப்பாக, பார்சிலோனா அணிக்காக அவர்  விளையாடப் போவதாக தெரிவிக்கப்பட்டது. பார்சிலோனா அணியின் நிர்வாகிகளும், க்ரீஸ்மனின் ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினர்.

இந்நிலையில் 'நான் பார்சிலோனா அணிக்கு மாறப்போவதில்லை. அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன்'  என்பதை க்ரீஸ்மன் பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, ஸ்பேனிஷ் தொலைக்காட்சி ஒன்றின் 'The Decision' எனும் நிகழ்ச்சியில் பேசிய க்ரீஸ்மன், "என்னுடைய ரசிகர்கள், என்னுடைய அணி, என்னுடைய வீடு எல்லாம் அட்லெடிகோ மாட்ரிட் தான்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடருக்கான பிரான்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள க்ரீஸ்மன், இதுவரை 54 போட்டிகளில் ஆடி 20 கோல்கள் அடித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: