Advertisment

அரபு நாட்டுக் கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விராட் - வைரல் வீடியோ!

32 வது பிறந்த நாளை கொண்டாடிய இந்த கிரிக்கெட் கேப்டனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

author-image
WebDesk
New Update
virat kohli, virat kohli birthday, anushka sharma, kohli birthday, anushka virat, anushka virat birthday, virat kohli birthday photos, virat kohli birthday video, virat kohli birthday party, anushka sharma latest, virat kohli age

Virat Kohli Birthday :   விராட் கோலி இன்று தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினருடன் துபாயில் பிறந்த நாளை கொண்டாடினார். 32 வது பிறந்த நாளை கொண்டாடிய இந்த கிரிக்கெட் கேப்டனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. ப்ளே ஆஃபிற்கு தகுதி பெற்ற பெங்களூரு அணியினர் இந்த பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

விராட் கோலியுடன் அனுஷ்காவுன் துபாய் சென்றிருப்பதால் அவரை அடிக்கடி ஸ்டேடியத்திலும், விராட் கோலியின் இன்ஸ்டா பக்கங்களிலும் பார்க்க முடிகின்றது. இந்த பிறந்த நாள் கொண்டாடத்தில் பங்கேற்ற சஹாலின் வருங்கால மனைவி தனஸ்ரீ வெர்மாவும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார். பிறந்த நாள் கேக் கட்டிங் வீடியோவை பதிவிட்டு, இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றதை நான் அதிர்ஷ்டமாக உணருகின்றேன். நீங்களும் உங்களின் மனைவியும் நான் சந்தித்த மனிதர்களிலேயே மிகவும் அன்பானவர்கள் என்றும் இன்ஸ்டகிராமில் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Virat Kohli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment