இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில், தோனி தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். தோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா உள்ளிட்டோர் தங்கள் வாழ்க்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.
அதேபோல், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். பொதுவாக, கிரிக்கெட் தொடருக்காக விராட் கோலி எந்த நாட்டிற்கு சென்றாலும், சிட்டாக பறந்துவிடும் அனுஷ்கா, இப்போது இங்கிலாந்துக்கு தனது கணவரை உற்சாகப்படுத்த வந்திருக்கிறார். அப்படியே, தோனியின் பிறந்தநாள் விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, இளம் ஜோடி கைக் கோர்த்து செல்லும் படங்கள் இணையங்களில் வைரல் ஆகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில், அனுஷ்காவின் வருகை கோலிக்கு சற்று ஆறுதல் தான்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/s577-300x217.jpg)