நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், விராத் கோலி சதம் அடித்ததை, அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாக பதிவிட்டு கொண்டாடினார்.
தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. கேப்டன் விரார் கோலி, ஒரு நாள் போட்டியில், தனது 33 ஆவது சதத்தை நிறைவு செய்தார்.
அதனுடன் விராட் கோலி ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இந்த மகிழ்ச்சி தருணத்தை அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட விராத் - அனுஷ்கா ஜோடிக்கு சமூகவலைத்தலங்களில் ரசிகர்கள் ஏராளம். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இவருவரும் இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ரகம் தான்.
இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை, அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வழக்கம். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக அனுஷ்கா விராத் கோலியின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் விராத் கோலி சதம் அடித்த தருணத்தை கொண்டாடும் வகையில், களத்தில் கோலி பேட்டிங் செய்யும் புகைப்படம், அவர் சதம் அடித்த தருணம், இந்தியா வெற்றி பெற்ற அறிவிப்பு இந்த மூன்றையும் புகைப்படங்களாக அனுஷ்கா பதிவிட்டிருந்தார்.
தனது காதல் கணவரின் சதத்தை கொண்டாடும் வகையில், புகைப்படத்தில் What a guy என்று ஹாட்டின் குறியீட்டையும் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.தென்னாப்பிரிக்காக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, விராட் கோலி சதம் அடித்தார். அப்போது, தனது கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை கோலி முத்தமிட்டு அனுஷ்காவுக்கு தனது வெற்றியை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.