நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், இந்தியா பெற்ற வெற்றி வெறும் கனவு மட்டுமல்ல... சரித்திரமும் கூட!. இத்தனை இத்தனை ஆண்டுகளாக பல இந்திய ஜாம்பவான்களால் முடியாத காரியத்தை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்திருக்கிறது.
டி20 தொடரை டிரா செய்தாலும் மிக முக்கியமான டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் வென்றிருப்பது இந்திய கிரிக்கெ கிரீடத்தின் உச்சியில் பொறிக்கப்பட வேண்டிய வைரக்கல் ஆகும். கேப்டன் விராட் கோலி, '2011ல் 50 ஓவர் உலகக் கோப்பையை விட, ஆஸ்திரேலிய தொடரை வென்றது தான் சிறப்பு மிக்கது' என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
அதுவும், தல தோனியின் அபாரமான கம் பேக் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் ஆச்சர்யமே!.கேப்டன் கோலிக்கு இது பெரும் மன நிறைவைக் கொடுத்திருக்கிறது. (2019 வேர்ல்டு கப், கண் முன்னாடி வந்து போகுமா இல்லையா!!)
தோனி தலைமையில் 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை(CB Series) இந்திய அணி கைப்பற்றி இருந்தாலும், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மட்டும் மோதிய Bilateral ஒருநாள் தொடரை வென்றிருப்பது இதுவே முதன் முறையாகும். எத்தனையோ கேப்டன்களால் முடியாத சாதனையை விராட் கோலி இப்போது படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மீடியாக்கள் கூட, வேறு வழியின்றி கோலியை புகழ்ந்து கட்டுரைகள் எழுதி வருகின்றன.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கோலியை பாராட்டி வரும் நிலையில், கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கணவனை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
What an unforgettable & outstanding tour it's been !! Happy to have witnessed the historic victories by the men ???? ???? ???? HUGE congratulations ???????? And so proud of you my love @imVkohli ❤️ ???? pic.twitter.com/QdAdN9OFaz
— Anushka Sharma (@AnushkaSharma) 18 January 2019
அதில், "என்ன ஒரு மறக்க முடியாத, அற்புதமான சுற்றுப்பயணம் இது!. இந்த வரலாற்று வெற்றியை நேரில் இருந்து ரசித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பெரும் வாழ்த்துகள். எனது காதலை (விராட் கோலி) நினைத்து நான் பெருமை கொள்கிறேன்" என்று ட்வீட்டியுள்ளார்.
மேலும் படிக்க - "என் கதையில நா வில்லன் டா"! - விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.