செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10ம் தேதி முதல் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. தற்போது இந்த போட்டிக்கான காலிறுதி போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல் காலிறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியும், கர்நாடகா அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 17.2 ஓவரிகளிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. முன்னணி வீரர் தேவதூத் படிக்கல், கேப்டன் கருண் நாயர் போன்றோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அந்த அணியின் அனிருத்தா ஜோஷி அதிகபட்சமாக 27 ரன்களை எடுத்திருந்தார்.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 12.4 ஓவர்களிலே இலக்கை எட்டியது. அந்த அணியின் கேப்டன்
மந்தீப் சிங் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்து அந்த அணியை வெற்றி பெறச்
செய்தனர். இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி அரை இறுதி போட்டிக்குச் செல்வதை உறுதி செய்துள்ளது.
இந்த தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளை வென்ற தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறி இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை
நடந்த இரண்டாவது காலிறுதிப் போட்டியில் தமிழக அணியும் இமாச்சல பிரதேச அணியும் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இமாச்சல பிரதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியின்துவக்க வீரர் அபிமன்யு
ராணா சிறப்பாக விளையாடி 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களைச் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன்
ரிஷி தவான் நிதானமாக ஆடி 26 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார்.
பின்னர் களமிறங்கிய தமிழக அணியின் துவக்க வீரர்கள் நாராயண் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த் , மற்றும் அருண் கார்த்திக் போன்றோர்
சொற்ப ரங்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அதன் பின் ஜோடி சேர்ந்து ஆடிய அபராஜித் மற்றும் ஷாருக் கான் தமிழகஅணியை
சரிவில் இருந்து மீட்டதுடன், எதிரணியின் பந்து வீச்சையும் துவம்சம் செய்தனர். அதோடு இமாச்சல பிரதேச அணி நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கை 17.5 எட்டி அணியை அபார வெற்றி பெறச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி அரையிறுதிக்குச் செல்லும்
வாய்ப்பைப் பெற்றுள்ளது.