/tamil-ie/media/media_files/uploads/2018/08/d48.jpg)
Asian Games 2018
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 : இந்தோனேசியாவில் நேற்று தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது.
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 18) இந்தோனேசியாவில் தொடங்கியது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 10m Air Rifle கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டேலா + ரவி குமார் இணை பங்குபெற்றது.
இந்த இணை 9.7 + 10.6 + 9.7 +9.7 = 420.2 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2018ல் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவேயாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.