/indian-express-tamil/media/media_files/2025/08/14/arjun-tendulkar-engaged-saaniya-chandhok-net-worth-tamil-news-2025-08-14-21-47-19.jpg)
அர்ஜுன் டெண்டுல்கருக்கும் சானியா சந்தோக் என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர். தந்தையை போலவே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட அர்ஜுன், சிறு வயது முதலே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் என ஆல்ரவுண்டராக உள்ளார். ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் சானியா சந்தோக் என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் இரு வீட்டினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். சானியா சந்தோக் பிரபல தொழில் அதிபரின் மகள் என்றும், இவர் செல்லப்பிராணி ஊட்டச்சத்து மற்றும் நல நிறுவனமான பாவ்ஸ் பெட் ஸ்பா மற்றும் ஸ்டோர் எல்.எல்.பி நிறுவனத்தின் பங்குதாரராகவும், இயக்குநராகவும் உள்ளார்.
யார் இந்த சானியா சந்தோக்?
சானியா சந்தோக், கிராவிஸ் குழுமத்தின் தலைவரும் மும்பையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தொழிலதிபருமான ரவி கய் என்பவரின் பேத்தி ஆவார். கிராவிஸ் குழுமம் மும்பையில் விருந்தோம்பல் மற்றும் உணவு மற்றும் பானத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மிஸ்டர் பாவ்ஸ் பெட் ஸ்பா அண்ட் ஸ்டோரில் இயக்குநராக இருப்பதைத் தவிர, சானியா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய கால்நடை சேவையிலிருந்து கால்நடை தொழில்நுட்ப வல்லுநர் டிப்ளோமா பெற்றார்.
கிராவிஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், 2023-24 நிதியாண்டில் ரூ.624 கோடி வருவாயை ஈட்டியதாக அறிவித்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். ஊடக அறிக்கைகளின்படி, அந்த நிறுவனம் ரூ.2.23 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தையும் ரூ.90,100 செலுத்தப்பட்ட மூலதனத்தையும் கொண்டுள்ளது. மிஸ்டர் பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி ரூ. 10 லட்ச அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டுள்ளது என்றும், குழுவின் பெரிய பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு சாதாரண செயல்பாடாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.