Advertisment

ஆல் ரவுண்டராக அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்! பாராட்டும் ஆஸி., ஊடகங்கள்!

சிட்னி கிரிக்கெட் மைதானம் நடத்திய உள்ளூர் டி20 போட்டி ஒன்றில், அர்ஜுன் டெண்டுல்கர் தனது சிறப்பான ஆல் -ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் வெளிப்படுத்தி உள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆல் ரவுண்டராக அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்! பாராட்டும் ஆஸி., ஊடகங்கள்!

சிட்னி கிரிக்கெட் மைதானம் நடத்திய உள்ளூர் டி20 போட்டி ஒன்றில், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது சிறப்பான ஆல் -ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Advertisment

பிராட்மேன் ஓவல் மைதானத்தில் விளையாடிய அர்ஜுன், 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 27 பந்துகளில் 48 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.

இதுகுறித்து அர்ஜுன் டெண்டுல்கர் அளித்த பேட்டியில், 'பிராட்மேன் பெயரைக் கொண்ட இந்த மைதானத்தில் விளையாடியதை நான் பெருமையாக கருதுகிறேன். ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் எனது ரோல் மாடல்கள். இப்போது இன்னும் வலிமையுடன் இருப்பதாக நான் உணர்கிறேன். நான் உயரமாக இருப்பதால், சிறுவயது முதலேயே வேகப்பந்துவீச்சில் ஆர்வம் கொண்டிருந்தேன். 'பயப்படாமல், உனது அணிக்காக உனது முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடு' என்பதைத் தான் என் தந்தை சச்சின் எனக்கு போதித்துள்ளார்.

நான் அழுத்தங்களை சுமக்க விரும்பவில்லை. பந்துவீசும் போது, அனைத்து பந்திலும் விக்கெட் எடுக்க நினைப்பேன். பேட்டிங் செய்யும் போது, எந்த பவுலரை விளாச வேண்டும், எந்த பவுலரை தவிர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பேன்' என்று கூறியுள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டத்தை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.

Sachin Tendulkar Arjun Tendulkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment