யார் இந்த அருளானந்த பாபு? தமிழ் தலைவாஸ் அணியில் புதிதாக இணைந்த தமிழக ஸ்டார்

தமிழக கபடி வீரரான அருளானந்த பாபு ஜனவரி 4, 2002 அன்று தமிழ்நாட்டின் தென்காசியில் உள்ள கடைநல்லூரில் பிறந்தார். தற்போது கல்லூரி படிப்பிற்காக சென்னையில் வசித்து வருகிறார்.

தமிழக கபடி வீரரான அருளானந்த பாபு ஜனவரி 4, 2002 அன்று தமிழ்நாட்டின் தென்காசியில் உள்ள கடைநல்லூரில் பிறந்தார். தற்போது கல்லூரி படிப்பிற்காக சென்னையில் வசித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Arul Nanda Babu Tamil Thalaivas Telugu Titans Match PKL 12 Jaipur Tamil News

கபடியில் அருளானந்த பாபு டிஃபென்டராக வலம் வருகிறார். அவர் ரைட் கார்னரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெற்ற 42-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 43 - 29 புள்ளிகள் கண்ணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

Advertisment

கிட்டத்தட்ட 12 புள்ளிகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ், இன்று சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தில் மீண்டு வர முயற்சிக்கும். அதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இந்நிலையில், நேற்று தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி சார்பில் தமிழக வீரர் அருளானந்த பாபு களமிறக்கப்பட்டார். 

சென்னையை தலைமையிடமாக கொண்ட அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக இருந்த பவன் செஹ்ராவத் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது இடத்தில் தமிழக வீரர் அருளானந்த பாபு சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. 

யார் இந்த அருளானந்த பாபு? 

தமிழக கபடி வீரரான அருளானந்த பாபு ஜனவரி 4, 2002 அன்று தமிழ்நாட்டின் தென்காசியில் உள்ள கடைநல்லூரில் பிறந்தார். தற்போது கல்லூரி படிப்பிற்காக சென்னையில் வசித்து வருகிறார். அவரது தந்தை வேலுசாமி கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது தாயார் முருகேஸ்வரி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு நாகராஜ் என்ற தம்பி மற்றும் மஞ்சுராணி என்ற தங்கையும் உள்ளார்கள். அவரது உடன்பிறப்புகள் கபடியை தீவிரமாக விளையாடுவதில்லை என்றாலும், அருள் சிறு வயதிலிருந்தே கபடியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  

Advertisment
Advertisements

கபடியில் அருளானந்த பாபு டிஃபென்டராக வலம் வருகிறார். அவர் ரைட் கார்னரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். Az அகாடமியைச் சேர்ந்த தனது பயிற்சியாளர் ரவிச்சந்திரனின் வழிகாட்டுதலின் கீழ், அருள் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது திறமைகளை மேம்படுத்துகிறார். விதிவிலக்கான டேக்கிள் திறன்களுக்கு பெயர் பெற்ற புகழ்பெற்ற புரோ கபடி வீரரான சந்தீப் நர்வால் மீதான அவரது அபிமானம், அருளின் விருப்பமான வீரரைத் தேர்ந்தெடுப்பதில் பிரதிபலிக்கிறது.

புரோ கபடி லீக்கில் பெங்களூரு புல்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருளின் தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்கள் கபடி போட்டியில் மிக உயர்ந்த மட்டத்தில் பங்கேற்பதும் அடங்கும். கபடிக்கு அப்பால், அருள் தடகளத்தில் ஆர்வமிகுந்தவர். குறிப்பாக, அவர் ஈட்டி எறிதலில் ஆர்வம் காட்டுகிறார். தற்போது சமூகவியலில் இளங்கலை பட்டம் பயின்று வரும் அருள், இந்திய கபடி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், தனது கபடி திறமை மூலம் ஒரு வேலையைப் பெறவும் விரும்புகிறார்.

கபடி மீதான அருளின் அர்ப்பணிப்பு, கல்வித் திட்டங்கள் மற்றும் விளையாட்டில் வெற்றிகரமான வாழ்க்கைக்கான அவரது விருப்பங்களுடன் இணைந்து, அவரது சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பையும், கபடி உலகில் முத்திரையைப் பதிக்கும் அவரது லட்சியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அவர் 2024 யுவ கபடி தொடரில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamil Thalaivas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: