Advertisment

பேட்ஸ்மேன்களின் சொர்க்க பூமியாக டெல்லி... பிட்ச் ரிப்போர்ட் பாருங்க!

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதான ஆடுகளம் இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

author-image
WebDesk
New Update
 Arun Jaitley Stadium pitch report India vs Afghanistan match in Delhi World Cup 2023 Tamil

டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கும் நிலையில், பனிப்பொழிவு பெரிய காரணியாக இருக்கும். எனவே, டாஸ் வென்ற கேப்டன் ளைக் கொடுத்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்யலாம்.

worldcup 2023 | india-vs-afghanistan | delhi Arun Jaitley Stadium pitch report: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் தொடங்கும்  9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

Advertisment

தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 199 ரன்னில் சுருட்டி, அந்த இலக்கை 41.2 ஓவர்களில் இந்தியா எட்டிப்பிடித்து அசத்தியது. அதே உத்வேகத்தில் இந்திய அணி இன்று களமிறங்கும். மறுபுறம், ஆப்கானிஸ்தான் தனது முதலாவது ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 156 ரன்னில் சுருண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த தோல்வியில் இருந்து மீள போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

டெல்லி பிட்ச் ரிப்போர்ட் 

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதான ஆடுகளம் இலங்கை -  தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 3 வீரர்களின் சதத்தோடு 428 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

இந்த ஆடுகளம் வழக்கமாக, மெதுவாக மற்றும் பள்ளமாக காணப்படும். அவை தற்போது சரி செய்யப்பட்டுள்ள நிலையில், உலகக் கோப்பைகளில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்களை குவிக்கும் மைதானமாக மாறியுள்ளது. இன்றைய ஆட்டத்திற்கும் அதே ஆடுகளம் என்பதால், ரன்மழையை எதிர்பார்க்கலாம். 

ஆடுகளம் சீரமைப்பு காரணமாக பந்து பேட்டுக்கு நன்றாக வரும். எனவே, இந்தியா மற்றும் ஆப்கான் ஸ்பின்னர்கள் சிரமத்தை எதிர்கொள்ளலாம். மைதானம் சிறிய பவுண்டரிகளை கொண்டது என்பதாலும், பேட்ஸ்மேன்கள் முந்தை ஆட்டத்தைப் போல் அடித்து நொறுக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், இது மற்றொரு அதிக ஸ்கோரிங் போட்டியாகவும் இருக்கும். 

டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கும் நிலையில், பனிப்பொழிவு பெரிய காரணியாக இருக்கும். எனவே, டாஸ் வென்ற கேப்டன் ளைக் கொடுத்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்யலாம். டெல்லி மைதானத்தில் இந்தியா இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 13-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Delhi Worldcup India Vs Afghanistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment