Tamil Sports Update : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால், நீண்ட நாள் தோழியான புல் புல் சாஹாவை அடுத்த மாதம் 2ந் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த திருமணம் தொடர்பான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
கடந்த 1982-ம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர் அருண் லால். பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் கடந்த 1955ஆம் ஆண்டு பிறந்த இவர், 1978ஆம் ஆண்டு தேயிலை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக கொல்கத்தா வந்துள்ளார்.
பணியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி அருண் லால் இந்திய அணிக்காக 16 டெஸ்ட், 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1996-ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
Advertisment
Advertisements
ஓய்வை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் வர்ணணையாளராக பணியாற்றிய அருண்லால்க்கு கடந்த 2016-ம் ஆண்டு தாடை புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு வர்ணணையில் இருந்து விலகிய அவர், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.
இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரீனா என்ற பெண்னை முதலில் திருமணம் செய்த அருண் லால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன்பிறகு, அவர் ஆசிரியையாக பணியாற்றி வரும் 38 வயதான புல் புல் சாஹா என்பவருடன் வழங்கி வந்தார்.
இவர்கள் பழக்கம் இப்போது திருமணத்தில் முடிய உள்ளது. அருண்லால் – சஹானா ஜோடி கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.. தொடர்ந்து வரும் மே 2-ந் தேதி இவர்களின் திருமணம் கொல்த்தாவில் நடைபெற உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil