worldcup 2023 | ravichandran-ashwin | netharlands Aryan Dutt: இந்தியாவில் ஐ.சி.சி நடத்தும் 13வது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நாளை வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் மல்லுக்கட்டுகிறது. பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 14ம் தேதி இதே அகமதாபாத்தில் அரங்கேறுகிறது.
இந்த தொடருக்கு இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதிச் சுற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் 'ஆர்யன் தத்' என்ற பூர்வீக இந்திய வீரர் இடம் பிடித்துள்ளார். அவரது தந்தை பஞ்சாபின் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் ஆர்யன் தத் தனது விடுமுறை நாட்களில் இந்தியாவுக்கு விசிட் அடித்தது உண்டு. அவருக்கு 13 வயதாக இருந்தபோது, சண்டிகரில் உள்ளூர் கிரிக்கெட் பயிற்சியாளர்களின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார்.
2021ம் ஆண்டில் நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமான இவர் 25 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட் இன்னும் முன்னணி விளையாட்டாக மாறாத ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்த தத், 2011ல் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பை வெல்ல தனக்குப் 'பிடித்த' மகேந்திர சிங் தோனியை வழிநடத்தியதைப் பார்த்து, ஆரம்பத்திலேயே கிரிக்கெட்டின் மீது காதல் கொண்டுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/e5898ced-d59.jpg)
"எனது பயணம் 2011ல் தொடங்கியது. எனக்கு அப்போது 9 வயது இருக்கும். அந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றது, எம்எஸ் தோனி எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்பதால் நான் போட்டியை நெருக்கமாகப் பின்பற்றினேன். அதன்பிறகு, நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன், இறுதியில், நான் வயதுக் குழுக்களுக்குச் சென்றேன், எனக்கு 13 வயதாகும் போது, உள்ளூர் பயிற்சியாளர்களுடன் பயிற்சி பெற சண்டிகருக்கு வந்தேன், ”என்று கூறியுள்ளார்.
அஸ்வினை சந்திக்க விரும்புவது பற்றி ஆர்யன் தத் பேசுகையில், "வாய்ப்பு இருந்தால், சில இந்திய வீரர்களைச் சந்திக்க விரும்புகிறேன். குறிப்பாக (ரவிச்சந்திரன்) அஸ்வின், அவர் களத்தில் என்ன நினைக்கிறார், எப்படி ஆட்டத்திற்குத் தயாராகிறார் என்பதை அறிய விரும்புகிறேன். நானும் ஆர்வமாக இருப்பேன். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் நீண்ட ஆயுளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வது மற்றும் அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி…” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“