வார்னருக்கு அடித்த அதிர்ஷ்டம்… நோ-பால், கேட்ச், ரன்-அவுட் என கோட்டை விட்ட இங்கிலாந்து!

AUS VS ENG 1st Test; David Warner rides his luck on way to 94 Tamil News: தொடக்கம் முதலே சிறப்பாக மட்டையை சுழற்றிய வார்னருக்கு அதிர்ஷ்ட லட்சுமி அருகில் இருந்தார் என்றே கூறலாம்.

Ashes test news in tamil: David warner gets 3 time luck from English cricketer

Ashes test news in tamil: பாரம்பரிய மிக்க ஆஷஸ் கிரிக்கெட் கோப்பை தொடர் இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் அரங்கேறியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். எனவே ஆஸ்திரேலிய அணி பந்து வீசியது.

தொடக்கம் முதலே மிச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா இங்கிலாந்தை 147 ரன்னில் சுருட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களும், ஓலி போப் 35 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். ஜோஸ் ஹாசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

2ம் நாள் ஆட்டம் – ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்னில் அவுட் ஆகி இருந்தாலும் டேவிட் வார்னர் – மார்னஸ் லாபுசாக்னே ஜோடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது.

தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அரைசதம் கடந்து அசத்தியது. இதில் 117 பந்தில் 2 சிக்ஸர் 6 பவுண்டரி என 74 ரன்கள் விளாசிய மார்னஸ் லாபுசாக்னே ஜாக் லீச் பந்தில் அவுட் ஆனார். ஆனால் அவருடன் மறுமுனையில் இருந்த வார்னர் இங்கிலாந்து அணியினர் செய்த தவற்றால் 94 ரன்கள் வரை சேர்த்தார்.

வார்னருக்கு கைகொடுத்த அதிர்ஷ்டம்

இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக மட்டையை சுழற்றிய வார்னருக்கு அதிர்ஷ்ட லட்சுமி அருகில் இருந்தார் என்றே கூறலாம். அவர் 17 ரன்கள் சேர்ந்திருந்த போது பென் ஸ்டோக்ஸ் வீசிய ஃபுல் டெலிவரியில் போல்ட்-அவுட் ஆனார். ஆனால் அதற்கு அவுட் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் அது ஒரு பெரிய நோ-பால். இந்தப் பந்து மட்டுமல்ல, அதற்கு முன்பாக ஸ்டோக்ஸ் வீசிய 3 பந்துகளுமே நோ-பால் தான்.

சில தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் டிவியில் காட்டப்படவில்லை. இறுதியாக டிவி நடுவர் தலையிட்டு நாட் அவுட் கொடுத்தார். இதனால் முதல் முறை வார்னர் தப்பினார்.

பென் ஸ்டோக்ஸ் முதல் செஷனில் மட்டும் 14 நோ-பால்களை வீசி இருந்தார். ஆனால், அவர் வீசிய ஒரு நோ-பால் மட்டும் நடுவரின் தலையிட்டால் தெரிய வந்தது.

தொடர்ந்து வார்னர் அரைசதம் நோக்கி முன்னேறிய போது, ஆலி ராபின்சன் வீசிய பந்து எட்ஜ் ஆக, கேட்ச் பிடிக்கும் உயரத்தில் இருந்த அந்த பந்தை ரோரி பர்ன்ஸ் கோட்டை விட்டார்.

இதோடு முடிந்ததா வார்னரின் அதிர்ஷ்டம்?. இல்லை. நிச்சயம் இல்லை.

வார்னர் பார்வர்ட் ஷார்ட் லெக் பீல்டர் ஹசீப் ஹமீது நின்ற திசையில் மட்டையை சுழற்ற பந்தை பிடிக்காமல் விட்டார் ஹசீப். இந்த தருணத்தில் கிரீசைத் தாண்டி சென்ற வார்னர் கீழே தடுக்கி விழுந்து விட்டார். பிறகு மீண்டும் கிரீஸ் நோக்கி நகர்ந்த அவரது கையில் பேட் இல்லை.

இந்த நேரத்தில் பந்தை கையில் பிடித்த ஹசீப்க்கு வார்னரை ரன்-அவுட் செய்ய நேர அவகாசம் இருந்தது. ஆனால், அவரோ பந்தை ஸ்டம்பில் அடிக்கத் தவறினார். இதற்குள் வார்னர் கையால் கிரீஸை ரீச் செய்தார். எனவே, வார்னர் மீண்டும் பிழைத்தார். மொத்தத்தில் வார்னர் 3 முறை அவுட் ஆக்குவதில் இருந்து தப்பித்துள்ளார் என்பது இங்கு குறிப்பித்தக்க ஒன்று.

தொடர்ந்து இங்கிலாந்து அணியினர் பந்துவீச்சை நொறுக்கிய வார்னர் சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராபின்சன் வீசிய 55.2வது ஓவரில் ஸ்டோக்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். எனினும், ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த அவர் 176 பந்துகளில் 2 சிக்ஸர் 12 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் குவித்தார்.

டிராவிஸ் அபாரம்

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் மிடில்- ஆடரில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோருக்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தனது 3வது சதத்தை பிரிஸ்பேன் மண்ணில் பதிவு செய்த அவர் 95 பந்துகளில் 2 சிக்ஸர் 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.

இந்நிலையில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி 343 ரன்களை குவித்துள்ளது. அந்த அணி இங்கிலாந்தை விட 196 ரன்கள் முன்னிலையிலும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ashes test news in tamil david warner gets 3 time luck from english cricketer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express