Advertisment

இங்கிலாந்தை புரட்டி எடுத்த ஆஸ்திரேலியா… புதிய சாதனைகளால் அணியினர் உற்சாகம்…!

Captain Pat Cummins becomes the first captain to take a 5- wicket haul in an Ashes Tamil News: ஆஷஸ் தொடர் வரலாற்றில் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார்.

author-image
WebDesk
New Update
Ashes test series Tamil News: for captain Pat Cummins 5-wicket haul on 1st Test

Ashes test series Tamil News: பாரம்பரிய மிக்க ஆஷஸ் கிரிக்கெட் கோப்பை தொடர் இந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் அரங்கேறியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணியை ஜோ ரூட்-டும், ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸும் வழிநடத்துகின்றனர். இந்த தொடர் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் நிலையில், கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

Advertisment
publive-image

இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். எனவே ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது.

publive-image

85 ஆண்டுகளுக்குப் பிறகு…

இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் வீசவே அதை தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் எதிர்கொண்டார். மிகத்துல்லியமாக வீசப்பட்ட அந்த பந்து ரோரி பர்ன்ஸின் இடது ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. எனவே, ரோரி பர்ன்ஸ் பூஜ்ஜிய ரன்னுடன் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

இதன் மூலம், ஆஷஸ் தொடர் வரலாற்றில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்பந்தில் விக்கெட் வீழ்த்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இதே உற்சாகத்துடன் பந்து வீசிய ஸ்டார்க் நீண்ட நேரம் களத்தில் தாக்குபிடித்த ஜோஸ் பட்லரின் விக்கெட்டையும் வசப்படுத்தினார்.

publive-image

பேட் கம்மின்ஸ் வரலாற்று சாதனை…

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வரும் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸுக்கு முதல் நாள் ஆட்டம் சிறப்பாகவே அமைந்தது எனலாம். தனது துல்லியவேக பந்துவீச்சால் இங்கிலாந்து அணிக்கு தொடர் நெருக்கடி கொடுத்தார். இதனால் அவரது பந்தை சமாளிக்க முடியாமல் அந்த அணியினர் தொடர்ந்து திணறினார். பந்துகளை மிக அழுத்தகமாக வீசிய அவர் முதல் இன்னிங்சில் முடிவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஆஷஸ் தொடர் வரலாற்றில் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார்.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்; 147 ரன்களுக்கு ஆல்-அவுட்

இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்த நிலையில், அந்த அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்து தடுமாறியது. உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்த ஆட்டத்தில், ஓலி போப் - ஜோஸ் பட்லர் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் பட்லர் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து போப் 35 ரன்களில் அவுட் ஆனார்.

publive-image

இறுதியில், இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களும், ஓலி போப் 35 ரன்களும், ஹசீப் ஹமீது 25 ரன்களும் சேர்த்தனர்.

publive-image

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். ஜோஸ் ஹாசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தேநீர் இடைவேளைக்கு பிறகு தொடர இருந்த ஆட்டம் மழையின் குறுக்கீட்டால் நிறுத்தப்பட்டதை அடுத்து முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

England Sports Cricket Australia Ashes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment