நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்தித்தது.
இந்த போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததது.
முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா, பூஜா வஸ்த்ராகர், ஸ்னே ராணா ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர்.
இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜேஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை வாரி சுருட்டினார்.
ஜூலான் கோஸ்வாமி, ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இவ்வாறாக இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியுடன் உலகக் கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.
அடுத்ததாக நியூஸிலாந்து அணியை விழாக்கிழமை (மார்ச் 10) எதிர்கொள்கிறது.
கபில் தேவின் சாதனையை சமன் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்</strong>
இலங்கை அணி பாலோ-ஆன் ஆனதை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
இலங்கை பேட்ஸ்மேன் பதும் நிசங்கா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம், முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரான கபில் தேவின் சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் சமன் செய்தார்.
இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.
மறைந்த ஷேன் வார்னேவின் உடலுக்கு பிரேத பரிசோதனை
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 174 ரன்களில் சுருண்ட இலங்கை அணி
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார்.
ரிஷப் பண்ட் 96 ரன்களில் சதத்தை நழுவவிட்டார். 100 ஆவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. நிசான்கா (26) மற்றும் அசலன்கா (1) இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால், முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 400 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி, பாலோ ஆன் ஆனதால், மறுபடியும் தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
லா-லிகா கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணி வெற்றி
லா-லிகா கால்பந்து தொடரில் ரியல் சோசிடாட் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணி வீழ்த்தியது.
1000 விக்கெட் எடுத்த அபூர்வ வீரர்… வார்னே பெஸ்ட் 8 மொமென்ட்ஸ்
இதன்மூலம் லா லிகா தொடரின் புள்ளிப்பட்டியலில் ரியல் மேட்ரிட் அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.இந்த சீசனில் 63 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
ரியல் மேட்ரிட் அணி அடுத்த போட்டியில் மல்லோர்கா அணியை செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“