scorecardresearch

‘உங்களை விட 100 மடங்கு அஷ்வின் சிறந்தவர்’: ஹர்பஜன் சிங் மீது நெட்டிசன்கள் திடீர் காட்டம்

அஸ்வினை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்த ஹர்பஜன் சிங்; ட்விட்டரில் கொதித்தெழுந்த ரசிகர்கள்

அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங்
அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை விமர்சிக்கும் விதமாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்திருப்பதற்கு, நெட்டிசன்கள் புள்ளி விவரங்களுடன் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்தியா இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், தனது நாட்டிற்காக பல போட்டிகளை கிட்டத்தட்ட ஒற்றைக் கையால் வென்றுள்ளார். இருப்பினும், தற்போதைய வீரர்களைப் பற்றிய அவரது சில கருத்துகள் மற்றும் மறைமுக விமர்சனங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: பாபர் அசாம் ‘புதிய மிஸ்டர் 360’ பதிவு: வறுத்தெடுக்கும் சூரியகுமார் ரசிகர்கள்

சமீபத்தில் இளம் உள்நாட்டு பந்துவீச்சாளர் மகேஷ் பித்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இந்த பந்துவீச்சாளரின் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் அனுபவமிக்க ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினைப் போன்ற பந்துவீச்சைக் கொண்டவர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர், இந்த வைரல் வீடியோவைப் பார்த்த பிறகு, ”முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. ஆனால் அதற்குள் அஸ்வின் ஆஸ்திரேலிய வீரர்களின் தலைக்குள் இருக்கிறார்,” என அஸ்வினை பெருமைப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பதிவிட்ட ஹர்பஜன் சிங், ஆடுகளம் தான் ஆஸ்திரேலிய வீரர்களின் மனதில் இருப்பதாகக் கூறி, ஆடுகளத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வினை ஹர்பஜன் சிங் மறைமுகமாக விமர்சித்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர், மேலும் அஷ்வின் அதிக மரியாதைக்கு தகுதியானவர் என்று கருதினர். அஸ்வினின் வெற்றிக்கு ஆடுகளத்தின் தன்மை தான் காரணம் என்று ஹர்பஜன் மறைமுகமாக கூறியதாக ரசிகர்கள் உணர்கிறார்கள்.

2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இருந்து படிப்படியாக ஹர்பஜன் சிங் வெளியேற்றப்பட்டார் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய முன்னணி ஆஃப் ஸ்பின்னர் ஆனார். அஸ்வின் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர்களில் ஒருவராக இருந்து வருகிறார், குறிப்பாக சொந்த மண்ணில். பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வெல்வதற்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கும் இந்தியாவின் வாய்ப்புகளுக்கு அஸ்வின் முக்கியமானவராக இருப்பார்.

ஹர்பஜன் சிங்கிற்கு ரசிகர்களின் எதிர்வினைகள் இங்கே.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ashwin 100 times better than you fans hit back harbhajan singh