Advertisment

ஆஸி.-க்கு எதிராக அதிக விக்கெட்: விறுவிறு போட்டியில் ஹர்பஜனை நெருங்கும் அஷ்வின்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ashwin closing in on Harbhajan's record against Australia Tamil News

India vs Australia: Ravichandran Ashwin closing in on Harbhajan Singh's record against Australia Tamil News

India vs Australia, Ravichandran Ashwin  - Harbhajan Singh Tamil News: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

Advertisment

ஆஸி.-க்கு எதிராக அதிக விக்கெட்: விறுவிறு போட்டியில் ஹர்பஜனை நெருங்கும் அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவானாக வலம் வருபவர் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். ஆஸ்திரேலிய அணிக்கும் அஸ்வினுக்குமான பந்தம் சிறப்பு வாய்ந்தது. அந்த அணிக்கு எதிராக அவர் விளையாடியுள்ள 18 டெஸ்ட் போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது அவர் விளையாடிய மற்ற எந்த டெஸ்ட் அணிகளுக்கும் எதிராக கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்டுகள் ஆகும். அதை தற்போது சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் விக்கெட் வேட்டை நடத்தி 100 என ரவுண்ட் ஆக்குவாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.

publive-image

36 வயதான அஸ்வின் 88 போட்டிகளில் 449 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், 18 போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கைக் கடக்க அவருக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை.

publive-image

ஒட்டுமொத்தமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே பெற்றுள்ளார். அவர் அந்த அணிக்கு எதிராக விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்:

அனில் கும்ப்ளே - 111 (20)

ஹர்பஜன் சிங் - 95 (18)

ரவிச்சந்திரன் அஸ்வின் - 89 (18)

கபில் தேவ் - 79 (20)

ரவீந்திர ஜடேஜா - 63 (12)

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Cricket Sports India Vs Australia Indian Cricket Kapil Dev Ravichandran Ashwin Anil Kumble Harbajan Singh Ravindra Jadeja Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment