/indian-express-tamil/media/media_files/3ams6tH6RA7MQY3qFcZy.jpg)
அஸ்வின் ‘மன்கட்’ தொடர்பான சம்பவத்தில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. 2012ல், அஸ்வின் இலங்கையின் லஹிரு திரிமன்னேவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.
Ravichandran Ashwin | India Vs South Africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியது. இதில், 'பாக்சிங் டே' போட்டியாக முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.
தற்போது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா இன்று மதிய உணவு இடைவேளையின் போது 100 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 147 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
வார்னிங் கொடுத்த அஸ்வின்
இந்நிலையில், இந்தப் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் மார்கோ ஜான்சனுக்கு கிரீஸை விட்டு அதிகம் வெளியேறியதற்காக எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் இன்னிங்ஸின் 98வது ஓவரில் நடந்தது. அஸ்வின் 5வது பந்தில் ஜான்சன் தனது கிரீஸை விட்டு வெளியேறிய பிறகு தனது பந்துவீச்சை நிறுத்தினார். அப்போது அஸ்வின் எதுவும் பேசாமல் சிறிய எச்சரிக்கை கொடுத்து மீண்டும் 5வது பந்தை வீசினார்.
A warning by Ashwin as Jansen trying to back too much. pic.twitter.com/0u5uCeudkH
— Johns. (@CricCrazyJohns) December 28, 2023
அஸ்வின் ‘மன்கட்’ தொடர்பான சம்பவத்தில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. 2012ல், அஸ்வின் இலங்கையின் லஹிரு திரிமன்னேவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இதேபோல், 2019ல் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோஸ் பட்லர் முன்கூட்டியே கிரீஸை விட்டு வெளியேறியதாக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இந்த சம்பவங்கள் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.