Advertisment

சொன்னதை கேட்காத ஸ்ரீசாந்த்; அடுத்த பிளைட்டில் டிக்கெட் போட சொன்ன தோனி; மிரண்டு போன அஸ்வின்

ஆட்டத்தின் நடுவில் ஸ்ரீசாந்த் மீது ஆத்திரமடைந்த தோனி, அடுத்த விமானத்தில் வீடு திரும்ப அவருக்கு டிக்கெட் புக் செய்யும் படி அணியின் மேலாளர் ரஞ்சிப் பிஸ்வாலிடம் தகவல் தெரிவிக்குமாறு அஸ்வினிடம் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ashwin reveals why Dhoni wanted Sreesanth to be sent home Tamil News

மற்ற ரிசர்வ் வீரர்களுடன் டக்-அவுட்டில் உட்காருமாறு ஸ்ரீசாந்த்-துக்கு அறிவுறுத்தி இருக்கிறார் தோனி.

இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், 'ஐ ஹேவ் தி ஸ்ட்ரீட்ஸ் - எ குட்டி கிரிக்கெட் ஸ்டோரி' என்ற தலைப்பில் 184 பக்கங்கள் கொண்ட சுயசரிதை புத்தகம் ஒன்றை மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் மோங்கா உடன் இணைந்து எழுதியுள்ளார். இதனை, பென்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. 

Advertisment

அந்தப் புத்தகத்தில் அஸ்வினின் கிரிக்கெட் பயணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக, 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றது வரையிலான தனது கிரிக்கெட் பயணத்தில் நடந்த சுவாரசிய சம்பவங்களை தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அமைதியாகவும், சாந்தமாகவும் தோன்றும் கேப்டன் கூல் தோனி, ஆட்டத்தின் நடுவில் ஆத்திரமடைந்த சம்பவத்தையும், அதனைப் பார்த்த தனது ரியாக்சன் பற்றியும் அவர் விளக்கமாக தெரிவித்துள்ளார். 

2010-ல் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக போர்ட் எலிசபெத்தில் மைதானத்தில் (இப்போது க்கெபெர்ஹா என அழைக்கப்படுகிறது) டி20 போட்டியில் ஆடிய போது, ஆட்டத்தின் நடுவில் எஸ். ஸ்ரீசாந்த் மீது ஆத்திரமடைந்த தோனி, அடுத்த விமானத்தில் வீடு திரும்ப அவருக்கு டிக்கெட் புக் செய்யும் படி அணியின் மேலாளர் ரஞ்சிப் பிஸ்வாலிடம் தகவல் தெரிவிக்குமாறு அஸ்வினிடம் கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ந்து போயியுள்ளார் அஸ்வின். தோனி அப்படிக் கூறக் காரணம், மற்ற ரிசர்வ் வீரர்களுடன் டக்-அவுட்டில் உட்காருமாறு  ஸ்ரீசாந்த்-துக்கு அறிவுறுத்தி இருக்கிறார் தோனி. ஆனால், அவரது பேச்சை காதில் வாங்காமல் ஸ்ரீசாந்த் டிரஸ்ஸிங் ரூமில் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். இதனை அறிந்த தோனி அஸ்வினிடம் அப்படி கூறியுள்ளார். 

இந்த சம்பவம் பற்றி அஸ்வின் தனது புத்தகத்தில் விவரிக்கையில், "ஸ்ரீ (ஸ்ரீசாந்த்) டிரஸ்ஸிங் ரூமில் மாடியில் இருக்கிறார் என்று நான் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் என்னிடம், 'ஸ்ரீசாந்த்தை கீழே வந்து மற்ற ரிசர்வ் வீரர்களுடன் அமரச் சொல்' என்று கூறினார். இதன்பின்னர், டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்ற நான், தோனி என்னிடம் தெரிவித்ததை ஸ்ரீசாந்த்திடம் கூறினேன். ஆனாலும் அவர் டிரஸ்ஸிங் ரூமிலே இருந்தார்.  

இப்போது நான் மீண்டும் ட்ரிங்க்ஸ் கொடுப்பதற்காக களத்திற்குள் சென்றேன். இந்த முறை நான் ஹெல்மெட்டுடன் சென்றேன். இந்த நேரத்தில் தோனி கோபமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. மேலும் அவர் இப்படி தனது கூலை இழந்ததை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. ஸ்ரீ  (ஸ்ரீசாந்த்) எங்கே? அவர் என்ன செய்கிறார்? என தோனி கோபத்துடன் என்னிடம் கேட்டார். 

அப்போது நான் அவரிடம், ஸ்ரீசாந்த் மசாஜ் எடுத்து வருகிறார் என்றேன். இதனைக் கேட்ட எம்.எஸ் தோனி எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஓவரில் ஹெல்மெட்டைத் திருப்பித் தர என்னை அழைதத்தார். இப்போது அமைதியாக இருந்தார். என்னிடம் ஹெல்மெட்டை கொடுக்கும் போது, 'ஒரு காரியம் செய். ரஞ்சிப் சாரிடம் போய், ஸ்ரீசாந்த் இங்கு இருப்பதற்கு ஆர்வமாக இல்லை என்று சொல். அதோடு, அவர் இந்தியா திரும்ப செல்ல, நாளைக்கு டிக்கெட் முன்பதிவு செய்யச் சொல் என்றார். 

இதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டே இருந்தேன். என்ன ஆயிற்று? உனக்கும் இப்போது ஆங்கிலம் புரியவில்லையா?' என்று என்னிடம் அவர் கேட்டார். 

அதன்பிறகு, ஸ்ரீசாந்த் உடனே எழுந்து டிரஸ் செய்து கொண்டு கீழே டக்-அவுட்டுக்கு வந்தார். அதோடு, அடுத்த முறை தோனி ட்ரிங்க்ஸ் கேட்ட போது, அதனைத் தூக்கிக் கொண்டு களத்திற்குள் விரைந்தார்." என்று கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

S Sreesanth Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment