Advertisment

ஸ்டம்ப் மைக்கில் சிக்கிய ஆடியோ... சக வீரரை தரக்குறைவாக திட்டினாரா அஸ்வின்?

ஐ.பி.எல். 2024 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சக அணி வீரர் ஒருவரை தரக்குறைவாக திட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ashwin scolded Rajasthan Royals player audio picked in stump Mic match during RR vs GT match Tamil News

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டை இழந்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Ravichandran Ashwin | Sanju Samson | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

Advertisment

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களும், சஞ்சு சாம்சன் 68 ரன்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மொகித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து 197 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணி அதிரடியாக ஆடியது. கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்போது சிறப்பாக ஆடிய ரஷீத் கான் 3 பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 7 விக்கெட்டை இழந்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

சக வீரரை தரக்குறைவாக திட்டினாரா அஸ்வின்?

இந்நிலையில், இந்தப் போட்டியின் போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சக அணி வீரர் ஒருவரை தரக்குறைவாக திட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்த ஆட்டத்தில் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 40 ரன்களை விட்டுக் கொடுத்தார். குறிப்பாக, அவர் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் எடுக்கப்பட்டது. அவர் கசியவிட்ட இந்த ரன்கள் குஜராத்தின் அணிக்கு திருப்புமுனையாக அமைந்து போனது. 

போட்டியில் 17வது ஓவரின் 2-வது பந்தை வீசுவதற்கு முன்பாக சில ஃபீல்டிங் மாற்றங்களை செய்தார் அஸ்வின். அப்போது ஷார்ட் தெர்டு மேன் பகுதியில் இருந்த ஃபீல்டரை பின்னால் போகச் சொல்லும்படி கேப்டன் சாஞ்சுவிடம் கூறினார். அப்போது அஸ்வின் "பின்னாடி போய் நிற்க சொல்லு.. அந்த சனியனை" என்று திட்டியதாகவும், உடனடியாக கேப்டன் சஞ்சு, "பின்னாடி நில்லுடா டேய்" என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அஸ்வின் யாரைக் குறிப்பிட்டு திட்டினார் என்பது தெரியவில்லை. 

அஸ்வின் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் நன்றாக தமிழில் பேசிப் பழகி வரும் நிலையில், அஸ்வின் சக வீரரை தமிழில் திட்டி சம்பவம் ராஜஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rajasthan Royals Sanju Samson Ravichandran Ashwin IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment