Ipl 2023 CSK Vs RR - MS Dhoni and R Ashwin Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5ல் வெற்றி, 4ல் தோல்வி, ஒரு போட்டிக்கு முடிவு இல்லை என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னையின் நெட் ரன்ரேட் +0.329 ஆகவும் உள்ளது.
சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தபட்சம் 3 போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும். மும்பை, கொல்கத்தா அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும், டெல்லி அணியுடன் தலா 2 போட்டியிலும் சென்னை அணி மோத உள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் ஆட்டம் நாளை சனிக்கிழமை (மே 6) தனது சொந்த மைதானத்தில் நடக்கிறது.
ராஜஸ்தானிடம் 2 முறை தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் நடந்தது வரும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 2 முறை எதிர்கொண்ட நிலையில், அந்த 2 போட்டியிலும் சென்னை அணி தோல்வியுற்றது. சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்திலும் சென்னையை ராஜஸ்தான் வீழ்த்தி இருந்தது.
பொதுவாக சேஸிங் போட்டிகளில் அடித்து நொறுக்கும் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது படை இந்த 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி தோனி சந்தீப் சர்மாவின் ஓவரை வெளுத்து வாங்கினார். ஆனால், கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது அதை எடுக்க முடியவில்லை. 2 சிக்ஸரை கொடுத்தாலும் கடைசி பந்துகளை சந்தீப் சர்மா சிறப்பாக வீசி இருந்தார். இதேபோல், ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்திலும் ஒட்டுமொத்த பந்துவீச்சு வரிசையும் நெருக்கடி கொடுத்ததது.
அஷ்வின் ஐடியா
இந்த வெற்றிக்கு சில வாரங்களுக்குப் பிறகு, ராஜஸ்தான் அணியின் ஆடும் லெவனில் இடம் பிடித்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடைசி ஓவரைப் பற்றி விரிவாகப் பேசினார். மேலும் கடைசி பந்துக்கு முன் சந்தீப்புடனான உரையாடலையும் வெளிப்படுத்தி இருந்தார். சுவாரஸ்யமாக, அஸ்வின் சந்தீப் சர்மாவிடம் "அபாயகரமான" பந்தை வீச பரிந்துரைத்துள்ளார். மேலும் அவர் அதை ஏன் செய்தார் என்பதையும் சமீபத்திய வீடியோவில் கூறியுள்ளார்.
"சந்தீப் சர்மா அந்த கடைசி ஓவரை தோனிக்கு வீசினார், அவர் அவரை 2 சிக்ஸர்களுக்கு விளாசினார். நீங்கள் 20 ரன்களை பாதுகாக்கும் போது, தோனி போன்ற ஒரு ஆளை உங்களை 2 சிக்ஸர்களுக்கு அடித்து நொறுக்கியபோது, அங்கிருந்து அந்த போரில் நீங்கள் வெளியேறும் வாய்ப்புகள் குறைவு. உண்மையில் வாய்ப்புகளே இல்லை.
நான் சந்தீப் சர்மாவிடம் சொன்னேன், 'நீங்கள் இப்போது அவருக்கு பந்துவீச முயற்சி செய்யுங்கள். முடிவில், அந்த நேரத்தில், இது பேட்டர் எதிர்பார்க்காத ஆபத்தான பந்து. ஏனெனில் பந்து வீச்சாளர் பெரும் அழுத்தத்தில் இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும்." என்று கூறியுள்ளார்.
'I' padathla Ramkumar Ganesan solra maari: Side la short'a vagudu eduthu, soft'aa pesinaa Sarath Babu nu nenechiyaa? Main villain eh avar dhaan da!! 😂😭 #HallaBolKonjamNallaBol
Watch the full episode here:https://t.co/F0fgmURG74 pic.twitter.com/yeL1Run9TT— Halla Bol Konjam Nalla Bol (@crikipidea) May 3, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.