ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று (18.9.18) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் பலபரீட்சை நடத்துக்கின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் : Asia Cup 2018 Ind vs Hong Kong 4th Match
6 நாடுகள் பங்கேற்றுள்ள 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் இன்று மோதுகிறது.
இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஹாங்காங் அணிக்கு எதிரான இன்றைய மோதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் விராட்கோலிக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு என்பதால்,ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. இந்திய அணியை பொருத்தவரையில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர்.
குறிப்பாக முன்னாள் கேப்டன் டோனி ஆட்டத்திற்கு ரசிகர்கள் வெய்டிங். அடுத்த நாளில் பாகிஸ்தானை சந்திக்க இருப்பதால் இந்திய அணி தனது பேட்டிங் வரிசையை பலப்படுத்த இன்றைய ஆட்டம் சிறந்த பயிற்சியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்று நடைபெறு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஹாங்காங் அணி தோல்வி கண்டால் போட்டியில் இருந்து வெளியேறி விடும். இரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக காணலாம்.