India vs Pakistan Asia Cup 2018: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் இன்று ரசிகர்களை குதூகலப்படுத்த இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எப்போது எங்கே ‘லைவ்’வாக பார்க்கலாம்?
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு மேற்படி இரு நாடுகளில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. துரதிருஷ்டவசமாக இரு நாடுகள் இடையிலான எல்லைப் பதற்றம், கிரிக்கெட்டையும் பாதித்துவிட்டது.
Read More; India vs Pakistan LIVE Cricket Match Score: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட், நெருக்கடியில் இந்திய அணி!
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இந்த இரு நாடுகளிலுமே நடப்பதில்லை. ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற நாடுகளில் மட்டும் இரு அணிகளும் பொதுவான இடங்களில் அவ்வப்போது மோதி வருகின்றன.
அந்த வகையில் இன்று (செப்டம்பர் 19) ஆசியக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் மல்லுக்கட்டுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் சில இங்கே:
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இன்று (செப்டம்பர் 19) துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 2006-க்கு பிறகு இரு அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்டில் சந்திப்பது இதுவே முதல் முறை! இரு அணிகள் இடையே வழக்கமான இரு தரப்புப் போட்டிகள் ஷார்ஜாவில் 1984 முதல் 2000 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்ற பிறகு இரு அணிகள் இடையே நடைபெறும் போட்டி இதுதான்.
இதுவரை இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆசியக் கோப்பைக்காக மட்டும் 12 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் இந்தியா 6 முறையும் (5 ஒருநாள் போட்டி, ஒரு டி 20 போட்டி), பாகிஸ்தான் 5 முறையும் ஜெயித்திருக்கின்றன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
When and Where to Watch India vs Pakistan Asia Cup 2018 Online Live Streaming: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எப்போது, எந்த சேனலில் காணலாம்!
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரம்: செப்டம்பர் 19 (இன்று) இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் டி.வி. ஒளிபரப்பு: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இன்றைய போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் காணலாம். தவிர, மொபைலில் ஹாட்ஸ்டார் ‘ஆப்’பிலும் ‘லைவ்’வாக பார்க்கலாம்! தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் உடனுக்குடன் லைவ் அப்டேட்களை தருகிறது.