/tamil-ie/media/media_files/uploads/2018/09/d313.jpg)
இந்தியா vs பாகிஸ்தான்
India vs Pakistan Live Cricket Streaming: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றில், போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், சர்ஃப்ரஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே, லீக் சுற்றில் மோதிய ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.
இதுவரை இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆசியக் கோப்பைக்காக மட்டும் 13 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் இந்தியா 7 முறையும் (6 ஒருநாள் போட்டி, ஒரு டி 20 போட்டி), பாகிஸ்தான் 5 முறையும் ஜெயித்திருக்கின்றன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு, நிச்சயம் பழித்தீர்க்கும் எண்ணத்துடன் பாகிஸ்தான் இன்று களமிறங்கும் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இன்று மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. டிவி கவரேஜ் மாலை 4 மணிக்கு தொடங்க, 4.30 மணிக்கு டாஸ் போடப்படும்.
Star sports 1, Star sports 1 HD-ல் ஆங்கிலத்திலும், Star Sports 1 Tamil சேனலில் தமிழ் மொழியிலும், Star Sports 3 and Star Sports 3 HD சேனலில் ஹிந்தியிலும் போட்டியை நேரடியாக கண்டு களிக்கலாம்.
இணையதளத்தில் HotStar-ல் இப்போட்டியை நேரடியாக காணலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிலிலும் லைவ் ஸ்கோர் கார்டினை நீங்கள் கண்டுகளிக்கலாம்.
மேலும் படிக்க - India vs Pakistan Live Cricket Score: மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.