Ravichandran-Ashwin | india-vs-srilanka | indian-cricket-team: இலங்கையில் நடைபெற்று வந்த 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டியில் இலங்கையை பந்தாடிய இந்தியா 8-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. தற்போது இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக கொழும்பிற்கு வருமாறு இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நிர்வாகத்தின் அழைப்பை அஸ்வின் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் வீரரான அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரது இடத்தை ஆஃப்-ஸ்பின்னரான அஸ்வின் அழைக்கப்பட்டுள்ளார். அஸ்வின் உடனடியாக இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முழு தகுதியுடன் இல்லை என்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன்னதாக உலகக் கோப்பை அணியில் அஸ்வினை சேர்க்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட தேர்வாளர்கள் குழு, அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹலிடம் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு தேவைப்படலாம் என்றும், அவர்களை தயாராக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், அஸ்வின் உட்பட உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத வீரர்களுடன் தொடர்பில் இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய போட்டிக்குப் பிறகான போட்டியில் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“