Asia Cup 2023, India vs Nepal Tamil News: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கியது. இதில் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் முதல் இன்னிங்சுடன் கைவிடப்பட்டது. அதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
ஏற்கனவே நடந்த தொடக்க ஆட்டத்தில் நேபாள அணியை வீழ்த்திய பாகிஸ்தான் 2 புள்ளிகள் பெற்றது. நேற்று இந்தியாவுக்கு எதிராக ஒரு புள்ளி பெற்றது. தற்போது மொத்தமாக 3 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. ஆனால், இந்தியா ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுமா? என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற உள்ள வழிகளை பார்க்கலாம்.
இந்தியா நாளை திங்கட்கிழமை நேபாளம் அணியுடன் மோதுகிறது. இப்போட்டியும் அதே பாலக்கல்லே மைதானத்தில் தான் நடக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம். நேபாள அணியை இந்தியா எளிதில் வீழ்த்தி விடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், நாளை மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாளையும் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால், இந்தியாவுக்கு மீண்டும் ஒரு புள்ளி கிடைக்கும். மழை காரணமாக டக்வொர்த் விதி ஏதேனும் சதி செய்தால், நேபாள அணி வெற்றி பெறும் வகையில் முடிவு மாறினால், நேபாள் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு சென்று விடும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். இந்தியா சூப்பர் 4 சுற்றில் நுழைவதும் உறுதி தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“