Advertisment

ஆசிய கோப்பை: இந்தியா - பாக்,. மோதல்… கோலியின் சாதனையை முறியடிக்கும் பாபர் அசாம்!

கோலி கேப்டனாக வேகமாக 2000 ரன்கள் எடுத்த சாதனையை முறியடிக்க உள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

author-image
WebDesk
Aug 31, 2023 17:47 IST
Asia Cup 2023: IND vs PAK clash, Babar Azam to break Virat Kohli record Tamil News

பாபர் தற்போது 30 இன்னிங்ஸ்களில் 1994 ரன்களில் உள்ளார். அதே நேரத்தில் கோலி 2000 ரன்களை கடக்க 36 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.

Asia Cup 2023 Tamil News: 6 அணிகள் பங்கேற்கும் 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. பாகிஸ்தானில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும், இப்திகார் அகமது 109 ரன்களும் சேர்த்தனர்.

Advertisment

தொடர்ந்து 343 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நேபாளம் அணி 104 ரன்கள் மட்டும் எடுத்து 23.4 வது ஓவரிலே ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 4 விக்கெட் , ஷாஹீன் ஷா அப்ரிடி , ஹரிப் ரவுப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சாதனையை முறியடித்த பாபர் அசாம்

இந்த ஆட்டத்தில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 131பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 151 வரை எடுத்தார். மேலும் அவர் தனது 19வது ஒருநாள் சதத்தையும் விளாசினார். இதன்மூலம் குறைந்த போட்டிகளில் அதிக ஒருநாள் சதம் அடித்த பட்டியலில் உள்ள இந்தியாவின் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா ஆகியோரை முந்தினார்.

பாபர் அசாம் 19வது ஒருநாள் சதத்தை அவர் 102 இன்னிங்ஸ்களில் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லாவை 104 இன்னிங்ஸ்களிலும், பாபர் கோலி அதையே 124 இன்னிங்ஸ்களிலும் எடுத்தனர். அவர்களின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

கோலியின் சாதனையை முறியடிக்கும் பாபர் அசாம்

இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் கேப்டனாக வேகமாக 2000 ரன்கள் எடுத்த சாதனையை முறியடிக்கும் விளிம்பில் உள்ளார். மேலும் நாளை மறுநாள் சனிக்கிழமை இலங்கையின் கண்டியில் நடக்கும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதலில் பாபர் இந்த சாதனையை அடைய முடியும்.

பாபர் தற்போது 30 இன்னிங்ஸ்களில் 1994 ரன்களில் உள்ளார். அதே நேரத்தில் கோலி 2000 ரன்களை கடக்க 36 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cricket #Sports #Babar Azam #Virat Kohli #India Vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment