ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இன்று இரவு 7.45 மணிக்கு வெளியாகிறது.
Asia Cup 2023: India Vs Pakistan Match Tamil News: ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ளது. முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பையில் இந்தியா கலந்து கொள்ளாது என்று கூறியதால் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், தொடரில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற உள்ளன.
Advertisment
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. இதில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. குரூப் பி-யில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
போட்டி அட்டவணை
Advertisment
Advertisements
நாள்
அணிகள்
இடம்
ஆகஸ்ட் 30
பாகிஸ்தான் Vs நேபாளம்
முல்தான், பாகிஸ்தான்
ஆகஸ்ட் 31
வங்கதேசம் Vs இலங்கை
கண்டி, இலங்கை
செப்டம்பர் 2
பாகிஸ்தான் Vs இந்தியா
கண்டி, இலங்கை
செப்டம்பர் 3
வங்கதேசம் Vs ஆப்கானிஸ்தான்
லாகூர், பாகிஸ்தான்
செப்டம்பர் 4
இந்தியா Vs நேபாளம்
கண்டி, இலங்கை
செப்டம்பர் 5
ஆப்கானிஸ்தான் Vs இலங்கை
லாகூர் பாகிஸ்தான்
சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil