Advertisment

ஆசிய கோப்பை கிரிக்கெட் முழு அட்டவணை: போட்டிகளை ஆன்லைனில் லைவ்-ஆக பார்ப்பது எப்படி?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை பாகிஸ்தானில் தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asia Cup 2023 live streaming in Tamil

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை டி.வி-யில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

Asia Cup 2023: 16வது ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் இலங்கை மண்ணில் நடக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. நாளை பாகிஸ்தானில் தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன.

Advertisment

இந்த தொடரில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது. தொடரில் பங்கேற்கும் 6 அணிகள் 3 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. குரூப் பி-யில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் மோசமாக செயல்படும் அணி முதல் கட்டத்திற்குப் பிறகு வெளியேற்றப்படும். அதைத் தொடர்ந்து, இறுதி 4 அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17 ஆம் தேதி, கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் மோதும்.

publive-image

சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

போட்டி அட்டவணை

நாள் அணிகள் இடம்
ஆகஸ்ட் 30 பாகிஸ்தான் Vs நேபாளம் முல்தான், பாகிஸ்தான்
ஆகஸ்ட் 31 வங்கதேசம் Vs இலங்கை கண்டி, இலங்கை
செப்டம்பர் 2 பாகிஸ்தான் Vs இந்தியா கண்டி, இலங்கை
செப்டம்பர் 3 வங்கதேசம் Vs ஆப்கானிஸ்தான் லாகூர், பாகிஸ்தான்
செப்டம்பர் 4 இந்தியா Vs நேபாளம் கண்டி, இலங்கை
செப்டம்பர் 5 ஆப்கானிஸ்தான் Vs இலங்கை லாகூர் பாகிஸ்தான்

ஆசிய கோப்பை 2023 இந்தியாவில் ஆன்லைனில் லைவ்-ஆக பார்ப்பது எப்படி?

ஆசிய கோப்பை 2023 போட்டிகளில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ்-ல் பார்க்கலாம். டி.வி-யில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

ஆசிய கோப்பை இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா,

சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பைக்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket India Vs Pakistan Asia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment