ஸ்ரேய்ஸ் ஐயர் ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
Asia Cup 2023 Shreyas Iyer and KL Rahul fitness update Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) பாகிஸ்தானில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன.
Advertisment
இந்த தொடருக்காக இந்திய அணி பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அணியில் காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேய்ஸ் ஐயர், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டிருந்தனர். மேலும் திலக் வர்மாவும் இடம் பெற்றுள்ளார். சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராக அணியில் பயணிக்க உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் கிரிக்கெட்டிலிருந்து விலகிய ஸ்ரேய்ஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் உடற்தகுதி நிலைகள் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அப்டேட் கொடுத்துள்ளார். அதில், கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதல் இரு ஆட்டங்களில் ஆட மாட்டார் எனவும், ஸ்ரேய்ஸ் ஐயர் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது தொடர்பாக ராகுல் டிராவிட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகையில், "ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார், அவர் அனைத்து பாக்ஸ்களிலும் டிக் செய்துள்ளார். பேட்டிங் மற்றும் முகாமில் நிறைய பீல்டிங் செய்தார். அவர் ஆட்ட நேரத்தை மட்டும் தவறவிட்டார். மிகவும் அழகாக பேட்டிங் செய்தார். மேலும் அது அவருக்கு அதிக நேரம் கொடுப்பதாக இருக்கும். அது ஆசிய கோப்பையில் கிடைக்கும் என்று நம்புகிறேன். உடற்தகுதியைப் பொறுத்தவரை அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் ஒரே நிலையில் உள்ளனர். ராகுல் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டார். தொடரின் முதல் இரு லீக் ஆட்டங்களில் (பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துக்கு எதிராக) அவர் அணியில் இடம் பெறமாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருப்பார்.
ராகுல் ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னதாக செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் மதிப்பீடு செய்யப்படுவார். அவரது இடத்தில் யார் பேட்டிங் செய்ய முடியும் என்பதைப் பார்க்க நாங்கள் வீரர்களைச் சுழற்ற வேண்டியுள்ளது. சரியான வீரர் கிடைக்காத போது நாம் மற்ற வீரர்களை முயற்சி செய்ய வேண்டும், அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும், அதுவே எப்போதும் முயற்சியாக இருந்து வருகிறது" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில் பெற https://t.me/ietamil“