Advertisment

2 ஸ்டார்களுக்கு இடம் இல்லை… இந்தியா பிளேயிங் 11 இப்படி இருக்கணும்: லேட்டஸ்ட் கணிப்பு

ஆசிய கோப்பை தொடரில் 2 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asia Cup 2023: Star Sports’ India squad exclude KL Rahul and Shreyas Iyer Tamil News

பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்திய அணியின் மிடில்-ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஸ்ரேயாஸ் ஐயரை நீக்க வல்லுநர்கள் குழு முடிவு செய்துள்ளது

Star Sports’ India squad for the Asia Cup 2023 Tamil News: ஆசிய கோப்பை 2023 தொடர் இந்த மாதம் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 13 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் செப்டம்பர் 2ம் தேதி நடக்கிறது.

Advertisment

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக நடக்கும் இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வசப்படுத்த தீவிரம் காட்டும். மேலும், கடந்த ஆண்டில் நடந்த தொடரில் இந்தியா வெளியேறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்க போராடும். இந்நிலையில், இந்த தொடரில் 2 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் - கே.எல்.ராகுலுக்கு இடமில்லை; திலக் வர்மாவுக்கு வாய்ப்பு

வல்லுநர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட டாப்-ஆர்டர் பேட்டர்களில் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மான் கில் ஜோடி தொடக்க வீரர்களாக உள்ளனர். விராட் கோலி வழக்கம் போல் 3வது இடத்தில் களமிறங்குவார். இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்படுவார். சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல் ராகுல் போன்ற குறிப்பிடத்தக்க போட்டியாளர்கள் அணியில் இடம் பெறாததால், இஷான் கிஷானை ஒரே விக்கெட் கீப்பராக சேர்த்தது புருவங்களை உயர்த்தியுள்ளது.

publive-image

பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்திய அணியின் மிடில்-ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஸ்ரேயாஸ் ஐயரை நீக்க வல்லுநர்கள் குழு முடிவு செய்துள்ளது. ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதனைக் கருத்தில் கொண்டு இருவரும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. திறமையான பேட்டர்கள் முறையே பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் ஐ.பி.எல் 2023 ஆகியவற்றின் போது ஏற்பட்ட காயங்களிலிருந்து மீண்டு வருகின்றனர்.

மிடில்-ஆர்டரில் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் திலக் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்த நட்சத்திர வீரர்கள் இந்தியாவின் பேட்டிங் வரிசையை ஸ்திரப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்ட் வீரர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை உள்ளடக்கிய வரிசையைக் கொண்டுள்ளது, அவர்கள் அனைவரும் தனித்துவமான திறன்களை வெளிப்படுத்துவார்கள்.

பந்துவீச்சு வரிசையில், சுழல் மற்றும் வேகத்தின் சமநிலையான கலவையை வல்லுநர்கள் தேர்வு செய்துள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சாளர்களுடன், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இந்த பந்துவீச்சு வரிசை பல்வேறு மற்றும் அனுபவத்தின் கலவையை வழங்குவதாக உறுதியளிக்கிறது. இது மிகவும் வலிமையான எதிரிகளுக்கு கூட சவால் விடும் வகையில் உள்ளது.

2023 ஆசிய கோப்பைக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Kl Rahul Indian Cricket Asia Shreyas Iyer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment