ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. கொழும்பில் நேற்று விடாது மழை பெய்த நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டு ரிசர்வ் டே ஆட்டத்திற்கு இன்று (செப்.11) மாற்றப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றிப் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர் 4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பவுலர்களை திணறடித்தனர். ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இன்று மழை நிலவரம்
அடுத்து விராட் கோலி- கே.எல் ராகுல் களமிறங்கி விளையாடத் தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டது. 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு போட்டி ரத்து செய்யப்பட்டு ரிசர்வ் டே ஆட்டத்திற்கு இன்று (செப்.11) மாற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து ரிசர்வ் டே ஆட்டத்திலும் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. கொழும்பு திங்கட்கிழமை வானிலை நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி மற்றும் 97 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை மதியம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்கும் போது ஈரப்பதம் 81 சதவீதமாக இருக்கும், மேகமூட்டம் 99 சதவீதமாக இருக்கும்.
இன்று பிற்பகல் சுமார் 17.9 மிமீ மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாலைக்குள் மழைக்கான வாய்ப்பு 80 சதவீதமாக குறையும் ஆனால் அதற்குள் 100 சதவீதம் மேக மூட்டம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“