Advertisment

ஆசிய கோப்பை 2023 : ஷஹீன் அப்ரிடிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி தயாராகிறார்கள்?

மழை காரணமாக வெளியில் பயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளதால், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியைத் தவிர, இடது கை பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்திய பயிற்சியாளர்கள் வீடியோ பதிவு செய்தனர்.

author-image
WebDesk
Sep 08, 2023 15:10 IST
Shaheen Afridi

ஆசிய கோப்பை குரூப் ஆட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிராக ஒரு விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாடும் ஷாஹீன் அப்ரிடி

6 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசியாகோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்கதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தியது.

Advertisment

தொடர்ந்து 2 நாள் ஓய்வுக்கு பின் நாளை வங்கதேசம் இலங்கை அணிகள் மோதவுள்ள நிலையில், அடுத்து (செப் 10) இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டிக்காக இந்திய அணி கொழும்புவில் உள்ள இன்டோர் நெடஸில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று (செப் 7) 2 பேர் இந்திய வீரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதில் ஒருவர், இலங்கை வீரர் நுவான் செனவிரத்னே, அணியின் த்ரோடவுன் நிபுணர் மற்றும் தரவு ஆய்வாளர் ஹரி பிரசாத் மோகன். முன்னதாக பாகிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தியவர் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி.

மீண்டும் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அதற்கு முன்பாக இந்திய அணியின் இந்த பலவீனத்தை சரி செய்ய முயற்சித்து வருகின்றனர். இடக்கை வேகபந்து வீச்சாளராக ஷஹீன் அப்ரிடியின் பந்துவீச்சை கணித்து விளையாடும் வகையில், செனவிரத்னே, இன்ஸ்விங்கர்கள் மற்றும் அவே-ஷேப்பர்களில் வளைவதற்கான பந்து-ஸ்லிங்க் கருவியை கையில் வைத்திருந்தார்.  மேலும் ஹரி பிரசாத் மோகன், இந்திய பேட்ஸ்மேன்களின் நுட்பத்தை, குறிப்பாக அவர்களின் கால் அசைவுகளை தனது டேப்பில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

இதில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர், பயிற்சியில் இருந்து வெளியேறினாலும், மற்றவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் செனவிரத்ன மற்றும் ஹரி வேலைகளை பார்த்து வியர்த்தனர். இந்த பயிற்சியில் ஷுப்மான் கில்; ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் காயத்தில் இருந்து மீண்ட பிறகு அணியுடனான தனது முதல் பயிற்சி அமர்வில் கே.எல்.ராகுல் கலந்து கொண்டார். மீதமுள்ளவர்கள் வீடியோக்களில் ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்து அதற்கு ஏற்றார்போல் விளையாட உள்ளனர்.

இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் களத்தில் விளையாடும்போது அவர்களின் முன் பாதங்கள் மிகவும் குறுக்கே வந்துவிட்டன அல்லது மிகவும் பின்னோக்கி சென்றுவிடுகிறது. இதனால் இடதுகை பந்துவீச்சாளர்களிடம் எளிதாக தங்களது விக்கெட்கெட்டை பரிகொடுத்துவிடுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் ஷாஹீனுக்கு எதிராக மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள இடது கை பந்துவீச்சாளர்கள் அனைவருக்கு எதிராகவும் இந்தியா கடுமையாக பாதித்துள்ளது.

இந்த செயல்முறை வீரர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இருவரும் இந்தியா பேட்ஸ்மேன்கள் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனிப்பதில் இருந்து விலகி இருந்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக திணறிய சுப்மான் கில், இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். இந்த போக்கை சரி செய்ய சுப்மான் கில் தீவிரமாக முய்றசித்து வரும் நிலையில், நெட்ஸில், அவர் தனது வழக்கம் போல் கிரீஸில் 90 டிகிரி கோணத்தில் பக்கவாட்டாக இல்லாமல் பந்தை நோக்கி நகர்ந்து விளையாடுவது போன்று பயிற்சி செய்தார்.

கில் மற்றும் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் 5-வது மிடில் ஆர்டரில் களமிறங்க ஒதுக்கப்பட்டுள்ளதால், இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டம்பைச் குறிவைத்து பந்து வீச முனைவார்கள். அதேபோல் அடுத்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷான் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தனது முறைக்காகக் காத்திருக்கும் ராகுல், செனவிரத்னவிடம், தனக்கு தகுந்த அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வீரர்களுக்கு எதையும் ஞாபகப்படுத்த தேவையில்லை, அவர்களின் மொபைல் டேஷ்போர்டில், எல்லா தகவல்களும் (அவர்களின் சொந்த மற்றும் எதிர்ப்பு) பகிரப்படும் இடத்தில், இந்த ஒவ்வொரு பந்து வீச்சாளர்களையும் எப்படி எதிர்கொள்வது அல்லது எப்படிச் சமாளிப்பது என்பது குறித்த ஏராளமான வீடியோ டுடோரியல்களை வரும் நாட்களில் அவர்கள் எளிதாக கிடைக்கும். முன்னதாக டி20 ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவைத் அச்சுறுத்திய பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி மீண்டும் பல்லேகலேயில் இந்தியாவின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுத்திருந்தார்.

அதே சமயம் உலகக் கோப்பை தொடரில், அப்ரிடியைத் தவிர, டிரென்ட் போல்ட் (NZ), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி (இங்கிலாந்து), மார்கோ ஜான்சன் (SA), முஸ்தாபிசுர் ரஹீம் (வங்காளதேசம்) என இடது கைபந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்தியாவின் வலது கை பேட்ஸ்மேன்கள் திணறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவை களத்தில் செட்டில் ஆக விடாமல் தனது பந்துவீச்சு மூலம் தாக்குதல் நடத்துபவர் தான் அஃப்ரிடி. 'இது எனது திட்டம்: ஒருவேளை பந்து விலகிச் செல்லுமா, அல்லது பந்தை விட்டு விடலாமா என்று பேட்ஸ்மேன்களை குழப்பும் வகையில் பந்துவீசும், அப்ரிடி உங்களால் முடிந்தால் என்னை நிறுத்துங்கள்' என்று அவர் சொல்வது போல் பந்துவீசி வியக்க வைத்து வருகிறார். இதனால் இந்திய வீரர்கள் ஷாஹீன் பந்துவீச்சுக்கு எதிராக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.. இதுவரை இலங்கையில் நிலவும் காலநிலையால் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரமான வானிலையால் அவர்களின் இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தீவில் தரையிறங்கியதிலிருந்து, கொழும்பில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளிக்கிழமை முதல் சூப்பர் 4 சுற்று ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அவர்களுக்கு ஒரே ஒரு முழு பயிற்சி மட்டுமே இருந்தது. இந்தியா இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு தற்ற பாடம் புகட்ட வாய்ப்புள்ளது. அதே சமயம், இதில் இந்தியா தோல்வியடைந்தால், உலகக் கோப்பையில் இன்னும் சிக்கல்கள் வரலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment