ஆசியக்கோப்பை இறுதி போட்டி : நாளை (28.9.18) நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஆறு நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெற்றன. ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று (27.9.18) நடைபெற்ற ‘சூப்பர் 4’ போட்டியில், வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஆசியக்கோப்பை இறுதி போட்டி இந்தியா vs வங்கதேசம் :
இதில், டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிஙகை் தேர்வு செய்தது. வங்கதேச வீரர், முஷ்பிகுர் ரஹிம் சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், வங்கதேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இமாம்-உல்-ஹக் 83 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். எனினும், அடுத்து களம் இறங்கிய சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், வெற்றி இலக்கை அடைய பாகிஸ்தான் அணி திணறியது. 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் வங்கதேச அணி மோதவுள்ளது.துபாயில் நாளை இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்காக உள்ளது.