விவகாரமான இடத்தில் ஆசியக் கோப்பைத் தொடர் – பிசிசிஐ பதிலுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கவுள்ள ஆசிய கோப்பைத் தொடரில், இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து ஜூன் 2020க்குள் இறுதி செய்ய வேண்டுமென அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கெடு விதித்துள்ளது. “ஆசிய கோப்பையில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வருமா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு…

By: Published: September 30, 2019, 2:29:05 PM

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கவுள்ள ஆசிய கோப்பைத் தொடரில், இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து ஜூன் 2020க்குள் இறுதி செய்ய வேண்டுமென அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கெடு விதித்துள்ளது.

“ஆசிய கோப்பையில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வருமா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை இதற்கு கால அவகாசம் உள்ளது. இவ்விஷயத்தில் இந்தியா ஆர்வம் காட்டாததால், தொடரை நடத்த முடியாமல் போனால்,  ஜூன் மாதத்திற்குள் நாம் எங்கே சென்று ஆட வேண்டும் என்பது தெரிய வேண்டும்.” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்துள்ளார்.


“இருப்பினும், தொடரை மாற்றுவதற்கான முடிவு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசி கைகளில் தான் உள்ளது. ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்பதில் தயாராக இருக்கிறோம்.” என்றும் வாசிம் கூறியுள்ளார்.

மேலும், “இரு நாட்டின் கிரிக்கெட் சங்கங்களை பொறுத்தவரையில், நல்ல உறவை பரிமாறி வருகிறோம். ஆனால், இந்திய வாரியத்துக்கு அரசின் தலையீடு அதிகமாக இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில், அவர்கள் விளையாட விரும்பினால், அவர்களாகத் தான் எங்களை அழைத்து, உறுதி கொடுக்க வேண்டும். பொதுவான இடத்தில் விளையாடவும் எங்களுக்கு பிரச்சனை இல்லை” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Asia cup in pakistan pcb wait for bcci confirmation till june next year

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X