Advertisment

15 நாட்களில் 3 முறை நேருக்கு நேர் மோதல்…இந்தியா - பாக்,. ரசிகர்கள் உற்சாகம்!

கிரிக்கெட் ரசிர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Asia Cup schedule: 3 India-Pak games in 15 days Tamil News

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றால், செப்டம்பர் 10ம் தேதி கொழும்பில் மீண்டும் மோதும் சூழல் உருவாகும்.

Asia Cup - India vs Pakistan Tamil News: ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ளது. முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பையில் இந்தியா கலந்து கொள்ளாது என்று கூறியதால் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், தொடரில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற உள்ளன.

Advertisment

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியாகியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 13 ஒருநாள் போட்டிகள் உள்ளன. இந்த 6 அணிகளும் 3 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளும், குரூப் பி-யில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகளில் ஒவ்வொரு குழுவிலும், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அட்டவணையின் படி, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் ஆகஸ்ட் 30 -ம் தேதி மோதுகின்றன.

கிரிக்கெட் ரசிர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி செப்டம்பர் 4 ஆம் தேதி கண்டியில் நேபாளத்தை எதிர்கொள்ளும்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா பகிர்ந்துள்ள அறிக்கையின் படி, முதல் சுற்றுக்குப் பிறகு பாகிஸ்தான் ஏ1 ஆகவும், இந்தியா ஏ 2 ஆகவும் இருக்கும். அவர்களில் யாராவது தகுதி பெறவில்லை என்றால், நேபாளம் அவர்களின் இடத்தைப் பிடிக்கும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றால், செப்டம்பர் 10ம் தேதி கொழும்பில் மீண்டும் மோதும் சூழல் உருவாகும்.

அதேபோன்று பி பிரிவில், இலங்கை பி1 ஆகவும், வங்கதேசம் பி2 ஆகவும் இருக்கும். இந்த அணிகளில் ஏதேனும் ஒன்று சூப்பர் 4-க்கு வரவில்லை என்றால், ஆப்கானிஸ்தான் அந்த இடத்தைப் பிடிக்கும். சூப்பர் 4 முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17 அன்று இறுதிப் போட்டியில் விளையாடும். இதனால்,

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்போது 15 நாட்களில் 3 முறை நேருக்கு நேர் மோதும் வாய்ப்புள்ளது.

ஆசிய கோப்பை தொடர் அட்டவணை பின்வருமாறு:

ஆகஸ்ட் 30: பாகிஸ்தான் vs நேபாளம், முல்தான்
ஆகஸ்ட் 31: பங்களாதேஷ் vs இலங்கை, கண்டி செப்டம்பர் 2: இந்தியா vs பாகிஸ்தான், கண்டி
செப்டம்பர் 3: பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான், லாகூர் செப்டம்பர் 4: இந்தியா vs நேபாளம், கண்டி
செப்டம்பர் 5: இலங்கை vs ஆப்கானிஸ்தான், லாகூர் சூப்பர் 4 ஸ்டேஜ்:
செப்டம்பர் 6: A1 vs B2, லாகூர்
செப்டம்பர் 9: B1 vs B2, கொழும்பு
செப்டம்பர் 10: A1 vs A2, கொழும்பு
செப்டம்பர் 12: A2 vs B1, கொழும்பு
செப்டம்பர் 14: A1 vs B1, கொழும்பு
செப்டம்பர் 15: A2 vs B2, கொழும்பு
செப்டம்பர் 17: இறுதி, கொழும்பு.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket India Vs Pakistan Pakistan Asia Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment