ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. (புகைப்படம்: AP)
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாததால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல் தலைவர் அருண் துமால் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
Advertisment
ஐ.சி.சி தலைமை நிர்வாகிகள் சந்திப்புக்காக தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருக்கும் அருண் துமால், பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பிரதிநிதி ஜாகா அஷ்ரஃப் ஆகியோர் வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட ஐ.சி.சி வாரியக் கூட்டத்திற்கு முன்னதாக ஆசியக் கோப்பை அட்டவணையை இறுதி செய்ய சந்தித்ததை உறுதிப்படுத்தினார்.
“பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப்பை சந்தித்தார், மேலும் ஆசிய கோப்பை அட்டவணை இறுதி செய்யப்பட்டது, அது முன்னர் விவாதிக்கப்பட்டதைப் போலவே உள்ளது. பாகிஸ்தானில் லீக் கட்டத்தில் நான்கு ஆட்டங்கள் இருக்கும், அதைத் தொடர்ந்து இலங்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடும் இரண்டு ஆட்டங்கள் உட்பட 9 ஆட்டங்கள் இருக்கும், மேலும் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடும் பட்சத்தில் மூன்றாவது ஆட்டம் நடைபெறும்,” என்று அருண் துமால் டர்பனில் இருந்து PTI இடம் கூறினார்.
Advertisment
Advertisements
பாகிஸ்தான் ஊடகங்களில் இருந்து வெளிவரும் செய்திகளை, அவர்களின் விளையாட்டு அமைச்சர் எஹ்சான் மசாரி சில இடங்களில் கூறி வருவதைப் போல, இந்தியா அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்று விளையாடும் என்பதை அருண் துமால் மறுத்தார்.
“அவ்வாறான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. இந்தியாவோ அல்லது பி.சி.சி.ஐ செயலாளரோ பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளியாகும் செய்திகள் தவறானது. அட்டவணை மட்டுமே இறுதி செய்யப்பட்டது,” என்று அருண் துமால் கூறினார்.
2010 ஆம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லாவில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும்.
பாகிஸ்தானின் சொந்த மண்ணில் விளையாடும் ஒரே ஆட்டம் நேபாளத்துக்கு எதிரானது.
மற்ற மூன்று ஆட்டங்கள் ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம், வங்கதேசம் vs இலங்கை மற்றும் இலங்கை vs ஆப்கானிஸ்தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil