Asia Cup to be shifted from Pakistan to Sri Lanka Tamil News: பாகிஸ்தான் மண்ணில் இந்த ஆண்டு செப்டம்பர் 2 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஆசிய கோப்பையை இலங்கையில் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்தியா பங்கேற்காது மற்றும் எல்லை தாண்டி பயணிக்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார். இதனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) பாகிஸ்தானில் இருந்து போட்டியை மாற்றி இலங்கையில் நடந்த திட்டமிட்டுள்ளது.
இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கை மண்ணில் தொடரை நடத்துவதற்கான நடவடிக்கையை ஆதரிக்கும் நிலையில், போட்டிக்கான இடம் குறித்த இறுதி முடிவு இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், போட்டியை புறக்கணிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) போட்டியை தங்களது நாட்டிலே நடத்துவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. பிசிசிஐ ஏசிசியின் பிற உறுப்பு நாடுகளின் ஆதரவைத் தெரிந்து கொண்ட நிலையில், தற்போது இந்த முடிவு ஒரு சம்பிரதாயமாகத் தெரிகிறது. பிசிசிஐ இந்திய அரசிடம் இருந்து அனுமதி இல்லாததால் போட்டிக்காக பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த பிறகு, பாகிஸ்தான் வாரியம் ஆசிய கோப்பையை நடத்த ஒரு மாதிரியை முன்மொழிந்தது. அதாவது, இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படும் என்று குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், அந்த முன்மொழிவு போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்களுடன் ஒத்துப்போகவவில்லை. மேலும், செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோடைக்காலம் உச்சத்தில் இருப்பதால், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, வளைகுடா பிராந்தியத்தில் விளையாடுவது குறித்து மற்ற வாரியங்கள் மைதானங்களை முன்பதிவு செய்துள்ளன. ஆசிய கவுன்சிலின் உறுப்பினர்களின் சமீபத்திய முறைசாரா சந்திப்பின் போது, ஓமன் கூட போட்டியை நடத்த முன்வந்தது. ஆனால் நிலைமைகளை மனதில் கொண்டு, இலங்கை ஒரு சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.
செப்டம்பரில் துபாய் ஆசிய கோப்பையின் 2018 பதிப்பை நடத்தியபோது, நிலைமைகள் வீரர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தன. இது ஹர்திக் பாண்டியா முதுகில் காயத்தால் உடைந்த போட்டியாகும். மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் உலகக் கோப்பை தொடங்க உள்ளது. மேலும் ஆசிய கோப்பையை ஒரு வகையான தயாரிப்பாக பயன்படுத்த ஆர்வமுள்ள அணிகள் முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், பிசிசிஐ செப்டம்பரில் (2020) ஐபிஎல் போட்டியை நடத்தியது. ஆனால் அந்த போட்டிகள் கூட கோடையின் இரண்டாம் பாதியில் நடத்தப்பட்டன. அதனால், வீரர்களை நிர்வகிக்க கடினமாக இருந்தது.
பாகிஸ்தான் பங்கேற்பில் கேள்வி?
கடுமையான வெப்பத்தில் வீரர்களை பணயம் வைக்க அணிகள் தயாராக இல்லை. மற்றும் இலங்கை கிரிக்கெட் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்ததால், ஆசிய கவுன்சில் வரும் வாரங்களில் இறுதி முடிவை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியை இலங்கை நடத்தினால், தம்புள்ளை மற்றும் பல்லேகல போன்ற மைதானங்களில் நடக்கும். ஏனெனில் கொழும்பு நகரில் வழக்கமாக செப்டம்பரில் பருவமழை பெய்யயும்.
தவிர, ஆசிய கவுன்சிலின் இந்த நகர்வு வரவிருக்கும் உலகக் கோப்பையில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும். பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் அறிக்கைகளின்படி, ஆசிய கோப்பை நாட்டிலிருந்து மாற்றப்பட்டால், அந்நாட்டு அணி போட்டியில் பங்கேற்காது என்று சுட்டிக்காட்டுகிறது. போட்டியை அவர்கள் புறக்கணித்தால், அக்டோபர்-நவம்பரில் இந்தியா நடத்தும் உலகக் கோப்பையிலும் அவர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகிவிடும்.
கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2022 ஆசியக் கோப்பையில் இலங்கை வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக வலம் வருகிறது. அப்போது போட்டி, ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக டி20 வடிவத்தில் விளையாடப்பட்டது. தொடரும் ஐசிசி நிகழ்வைப் பொறுத்து போட்டி 20 மற்றும் 50 ஓவர் வடிவங்களுக்கு இடையே மாறுகிறது. அவ்வகையில், இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் 50 ஓவர் முறையில் விளையாடப்பட உள்ளது. கடைசியாக 50 ஓவர் போட்டிகள் நடைபெற்றபோது, துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் படத்தை வாகைசூடியது.
பாகிஸ்தான் பங்கேற்பதை உறுதி செய்தால், ஆசிய கோப்பை 6 அணிகள் பங்கேற்கும் போட்டியாக இருக்கும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் தவிர, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பிரீமியர் கோப்பையை வென்ற நேபாளமும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil