india-vs-pakistan | pakistan-vs-srilanka | sports | cricket: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அபார வெற்றி பெற்றது. இதேபோல், நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் (+2.690 நெட் ரன்ரேட்) இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/huc4du32P81f6Svg33vq.jpg)
பாகிஸ்தானுக்கு ஆபத்து
தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை (-0.200) மற்றும் பாகிஸ்தான் ( -1.892) அணிகள் புள்ளிகள் பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. 4வது இடத்தில் உள்ள வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. அதனால், இறுதிப்போட்டிக்கான போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் நீடிக்கின்றன. இவ்விரு அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று போட்டி நாளை கொழுப்பில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் வெற்றியை ருசிக்கும் அணி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிராக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஆனால் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கூடுதலாக, இந்த போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லை. கொழும்பில் நாளை மீண்டும் மழை பெய்ய 90% வாய்ப்பு உள்ளது என்றும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், பாகிஸ்தானை விட (-1.892) சிறந்த நெட் ரன் ரேட் (-0.200) வைத்திருக்கும் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். எனவே, எந்த அணி இக்குறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதனை பொருந்திருந்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“