Advertisment

Asia Cup 2023 Super 4 SL vs BAN Score : 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை; போராடி தோற்ற வங்கதேசம்

ஆசிய கோப்பை; சதீரா அதிரடியால் 257 ரன்கள் சேர்த்த இலங்கை; கடுமையாக போராடிய வங்க தேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

author-image
WebDesk
New Update
Srilanka vs Ban

ஆசியகோப்பை சூப்பர் 4 சுற்று : இலங்கை - வங்கதேசம்

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இலங்கை அணி வங்கதேச அணியுடன் மோதுகிறது,

Advertisment

6 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த செப் 6-ந்தேதி தொடங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்த்தில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனிடையே சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டம் இன்று கொழும்பு பிரம்மதேசா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இலங்கை அணி வங்கதேச அணியுடன் மோதுகிறது. 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 21 போட்டிகளில் வெற்றிவாகை சூடியிருந்தது. அதேபோல் இதுவரை தொடர்ந்து 12 வெற்றிகளை பெற்றுள்ள இலங்கை அணி 13-வது வெற்றியை குறி வைத்து இந்த போட்டியில் களமிறங்கும்.

ஏற்கனவே குருப் போட்டியில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி இந்த போட்டியிலும் அதே ஃபார்மை தொடர முயற்சிக்கும். அதேபோல் இன்றைய போட்டியில் வங்கதேச அணி தோல்வியடைந்தால் அந்த அணியின் இறுதிப்போட்டி கனவு மங்கிவிடும். இதனால் இந்த போட்டியில் வங்கதேச அணி வெற்றிக்காக இறுதிவரை போராடும்.

இதனிடையே கொழும்பில் மழை பெய்வதற்கான 80% வாய்ப்புகள் உள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. ஆர் பிரேமதேச மைதானத்தில் காலை சூரிய ஒளி இருந்தது, ஆனால் இலங்கையில் வானிலை எவ்வளவு விரைவாக மாறுகிறது என்பதை சமீபத்திய போட்டிகளில் பார்க்க நேர்ந்தது. அப்படி மழையால் ஆட்டம் ரத்தானால் ரிசர்வ் டே கிடையாது.

இதனிடையே இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணி விளையாடும் வீரர்களின் விவரம்

இலங்கை

பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, மதீஷ பத்திரன

வங்கதேசம்

முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷமிம் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நசும் அகமது

இலங்கை பேட்டிங்

இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஸ்ஸங்க மற்றும் கருணரத்னே களமிறங்கினர். கருணரத்னே 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ், நிஸ்ஸங்க உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய நிஸ்ஸங்க 40 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சதீரா அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிய குசல் மெண்டிஸ் அரைசதம் அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அசலங்கா 10 ரன்களிலும், தனஞ்ஜெயா 6 ரன்களிலும் அவுட் ஆகினர்.

இதற்கிடையில் சிறப்பாக ஆடிய சதீரா அரை சதம் விளாசினார். தொடர்ந்து அவர் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் களமிறங்கிய ஷனகா சிறிது நேரம் தாக்குப் பிடித்து, 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய துனித் 3 ரன்களிலும், தீக்‌ஷனா 2 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக ரஜிதா களமிறங்கி 1 ரன் அடித்த நிலையில், ஆட்டத்தின் கடைசி பந்தில் சதீரா அவுட் ஆனார். சதீரா 72 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்தது. வங்கதேச தரப்பில் தஸ்கின் மற்றும் ஹசன் தலா 3 விக்கெட்களையும், இஸ்லாம் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

வங்கதேசம் பேட்டிங்

வங்க தேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நைம் 21 ரன்களிலும், மிராஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தாஸ் 15 ரன்களிலும், ஷகிப் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குபிடித்த முஷ்பிகுர் 29 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ஆடி வந்த ஹிர்தோய் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ஹிர்தோய் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் ஹொசைன் 5, அகமது 15, தஸ்கின் 1, இஸ்லாம் 7 ரன்கள் சேர்த்தனர். ஹசன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து வங்க தேச அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இலங்கை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் தீக்‌ஷனா, ஷனகா, பதிரனா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sri Lanka Bangladesh Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment