Advertisment

ஆசிய கோப்பை ஜெர்சியில் பாக்,. பெயர் இல்லை… அதிருப்தியான ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் ஏ.சி.சி மீது பாய்ச்சல்

ஆசிய கோப்பை அணி ஜெர்சியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asia Cup team jerseys Pakistan name missing; big controversy Tamil News

ஆசிய கோப்பை 2023 தொடரின் அதிகாரப்பூர்வ ஹோஸ்ட், அதாவது போட்டியை நடத்துவது பாகிஸ்தான் ஆகும்.

6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை சனிக்கிழமை (செப்டம்பர். 2ம் தேதி) இலங்கையின் பல்லகெலே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisment

சர்ச்சை

இந்நிலையில், ஆசிய கோப்பை அணி ஜெர்சியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஆசிய கோப்பை 2023 தொடரின் அதிகாரப்பூர்வ ஹோஸ்ட், அதாவது போட்டியை நடத்துவது பாகிஸ்தான் ஆகும். ஆனால், பாகிஸ்தானுக்கு இந்தியா பயணம் செய்யாது என்று தெரிவிக்கப்பட்டால் போட்டியை ஹைபிரிட் மாடலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அணிகளின் ஜெர்சியின் வலது பக்கத்தில் ஆசிய கோப்பை லோகோ மட்டுமே உள்ளது என்பதை குறிப்பிட்டு, போட்டி நடத்தும் நாட்டின் பெயர் இல்லை என்று சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு பேசி வருகிறார்கள். நேபாளம் - பாகிஸ்தான் குரூப் ஏ போட்டியிலும், வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கிடையிலான குரூப் பி போட்டியிலும் இதே விஷயம் கவனிக்கப்பட்டது. அவர்களது ஜெர்சியிலும் போட்டி நடத்தும் நாட்டின் பெயர் இல்லை.

இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ஜெர்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் நடத்தப்பட்ட போதிலும், ஆசியக் கோப்பையின் லோகோவுக்கு கீழே இலங்கையின் பெயர் குறிப்பிடப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டினர். ஏனெனில் முந்தைய ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றன.

இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ரஷித் லத்தீப், மொஹ்சின் கான் மற்றும் பலர், அணியின் ஜெர்சியில் மாற்றம் செய்ய அழுத்தம் கொடுக்காததற்காகபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் ஆசியா கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) கடும் கண்டனம் தெரிவித்தனர்.

"இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஆசிய கோப்பை அவர்களின் சொத்து என்பதால், இந்த மேற்பார்வையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விளக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் அவதூறாகப் பேசப்பட்டதைத் தொடர்ந்து பி.சி.பி விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்குப் பிறகு, எதிர்கால போட்டிகைளில் ஆசிய கோப்பை லோகோவுடன் நடத்தும் நாட்டின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று ஏ.சி.சி முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

ஆனால் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பி.சி.பி விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனவும், அப்படி ஏ.சி.சி முடிவு செய்யும் பட்சத்தில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பல அணிகள் பங்கேற்கும் போட்டியை நடத்த ஏன் ஒப்புக்கொண்டது என்று கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil

Sports Cricket India Vs Pakistan Pakistan Asia Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment